முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மூன்றாம் அலை முகம் காட்டாது; அரசு தக்கவை செய்யும்- கவிஞர் வைரமுத்து

0
148

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மூன்றாம் அலை முகம் காட்டாது; அரசு தக்கவை செய்யும்- கவிஞர் வைரமுத்து

‘கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசிகள்தான்’ என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். தமிழக அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்றுக்கூட வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தடுப்பூசி கிடைத்தல், தயக்கத்தை உடைத்தல், தக்கவர்க்குச் செலுத்தல், தருணத்தில் முடித்தல், நான்கும் நடந்திடில் மூன்றாம் அலை முகம்காட்டாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டரசு தக்கவை செய்யும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என்று நம்பிக்கையூட்டி பதிவிட்டிருக்கிறார்.