மாயத்திரை UA சான்றிதழ்: விரைவில் திரையரங்குகளில் வெளியீடு!

0
197

மாயத்திரை UA சான்றிதழ்: விரைவில் திரையரங்குகளில் வெளியீடு!

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார் . V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு சென்சார் குழுவினரால் UA சான்றிதழ் வழங்க பட்டுள்ளது . திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது .

மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – V.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம் – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்