மிரட்டும் ‘என்பிகே107’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

0
103

மிரட்டும் ‘என்பிகே107’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘என்பிகே107’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போயபதி சீனு இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ சமீபத்தில் வசூல் சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்த ‘க்ராக்’ படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். பாலகிருஷ்ணாவின் 107 வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. புழுதி தெறிக்க லுங்கி சட்டையில் நடந்து வரும் பாலகிருஷ்ணா மிரட்டலாக கவனம் ஈர்க்கிறார்.

அதேசமயம், சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெற்றிபெற்ற ’மஃப்டி’ படத்தின் ரீமேக்கா என்று கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள். ஏனென்றால், ‘மஃப்டி’ படத்தின் போஸ்டரை ‘என்பிகே107’ படத்தின் போஸ்டரும் நினைவூட்டுகிறது. ‘மஃப்டி’ படம்தான் தற்போது சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ படமாக ரீமேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.