மாறன் விமர்சனம்: தனுஷ் ரசிகர்கள் இளைப்பாற விடாமல் கடந்து போய் விடுகிறது – ரேட்டிங் 2/5
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள மாறன் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன்.இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்துள்ளது.
இதில் தனுஷ், மாளவிகா மோகன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, மகேந்திரன், ராம்கி, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை- ஜி.வி.பிரகாஷ்,திரைக்கதை- ஷர்பு மற்றும் சுஹாஸ், ஓளிப்பதிவு-விpவேகானந்த் சந்தோஷம், சண்டை-ஸ்டன்ட் சில்வா, மக்கள் n;தாடர்பு-சுரேஷ் சந்திரா, ரேகா.
நேர்மையான ரிப்போர்ட்டர் தந்தை ராம்கி சதிகாரர்களால் கொல்லப்பட, தாயும் தங்கையின் பிரசவத்தில் இறந்து விட, அனாதையாகும் தனுஷ் தன் மாமா ஆடுகளம் நரேனின் பராமரிப்பில் வளர்கிறார். தங்கையை காப்பாற்றி, பின்னர் தந்தையைப் போல் நேர்மையான ரிப்போர்ட்டராக வேலை செய்கிறார். மிகவும் செல்வாக்குமிக்க அரசியல்வாதி சமுத்திரகனியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி செய்தி வெளியிடுகிறார். இதனால் பல இன்னல்களை சந்திக்கிறார். இவற்றையேல்லாம் சமாளித்து தன் வாழ்க்கையை ஜெயித்து காட்டினார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பத்திரிகையாளர் மாறனாக தனுஷ் அலட்டல் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன் கதாபத்திரத்தை பதிவு செய்து வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் தடுமாறியிருப்பது படத்தில் தெரிகிறது.
மாறனின் சகோதரியாக ஸ்மிருதி வெங்கட் படத்தில் பாதிப்பை ஏற்படுத்தி சிறப்பாக செய்துள்ளார். மாளவிகா மோகனன் பேசாமல் இருப்பதற்காக பபிள்கம்மை கொடுத்து விட்டார்கள் என்று தெரிகிறது. இயக்குநர் அமீர் மற்றும் கிருஷ்ணகுமார் இருவருமே முத்திரை பதித்துள்ளனர். மிரட்டும் வில்லனாக சமுத்திரகனி வந்து போகிறார். ராம்கி, ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், இளவரசு, யூடியூபர் பிரசாந்த், மாஸ்டர் மகேந்திரன், போஸ் வெங்கட் ஆகியோர் பக்கமேளங்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையும், பின்னணி இசையும் மனதில் பதியவில்லை என்றாலும், முடிந்தவரை ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஓளிப்பதிவு-விpவேகானந்த் சந்தோஷம் படத்திற்கு பலம்.
வலிமைமிக்க அரசியல்வாதியை எதிர்க்கும் சாதாரண ரிப்போர்ட்டரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கலந்து அண்ணன் தங்கை பாச பின்னணியில் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர் ஷர்பு மற்றும் சுஹாஸ். இதை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் கார்த்திக் நரேன் அழுத்தமாக பதிவு செய்யாததனால் விறுவிறுப்பு இல்லாமல் படத்தின் காட்சிகள் மனதில் பதியாமல் சிதறிவிடுகிறது. இது அனைவரும் பார்த்த ஊகிக்கக்கூடிய கதைக்களம் என்பதால் புதுமையாக யோசித்திருந்தால் பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள மாறன் படம் தனுஷ் ரசிகர்கள் இளைப்பாற விடாமல் கடந்து போய் விடுகிறது.