மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்து கேக் வெட்டி கொண்டாடிய  படக்குழு!

0
117

மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்து கேக் வெட்டி கொண்டாடிய  படக்குழு!

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு தரமான அரசியல் திரைப்படங்களை தந்த மாரி செல்வராஜ் அடுத்து இயக்கி வரும் படம் மாமன்னன்.

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ரஹ்மான் இசையமைக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

அரசியல் பணியில் பிஸியாக இருந்ததால் உதயநிதி ஸ்டாலின் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மொத்தம் பத்து தினங்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மீதி நாட்களில் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சியை மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளார்.

இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து அதனை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது படக்குழு. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வராஜ் ரஞ்சித் தயாரிப்பில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக தான் முடிவாகியிருந்தது. உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் அந்தப் படத்தை தள்ளிவைத்து மாமன்னன் படத்தை தொடங்கியுள்ளார் மாரி செல்வராஜ். வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், ஏ ஆர் ரஹ்மான் என்ற இந்த அபூர்வமான காம்பினேஷனை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.