மக்களை கவரும் அஞ்சலி மின்னுகிறார்
நித்தின் ஹீரோவாக நடிக்கும் படம் ‘மச்சர்ல நியோஜகவர்கம்’. க்ரித்தி ஷெட்டி மற்றும் கேத்தரின் தெரசா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அரசியல் கலந்த மாஸ் என்டர்டெயினராக உருவாகி வருகிறது. ராஜ்குமார் அகெல்லாவின் வழங்கலில் ஷ்ரெஷ் மூவிஸ் பேனரில் சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி தயாரிக்கின்றனர். எம்.எஸ்.ராஜசேகர் ரெட்டி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை அஞ்சலி ஒரு சிறப்பு பாடலில் ஜொலிக்கிறார். இந்த பாடலில் அவரது தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அஞ்சலியின் பாடல் மக்களை கவரும் என படக்குழுவினர் கூறுகின்றனர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படம், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.
இப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், இசை: மஹதி ஸ்வரசாகர், ஒளிப்பதிவு: பிரசாத் மூரெல்லா.