மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் விக்ரம்? ராஜமெளலியின் அடுத்த திட்டம்!

0
66

மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் விக்ரம்? ராஜமெளலியின் அடுத்த திட்டம்!

‘நான் ஈ’ படத்தின் மூலம் தன்னை நிரூபித்துவிட்டு ‘பாகுபலி’ என்னும் மெகாஹிட் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் புகழ் அடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி.

இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் இது.

பாகுபலியை விட பல மடங்கு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த ஹீரோ யார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்குவதாக உறுதியான தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ராஜமௌலி படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

உதாரணமாக நான் ஈ சுதீப், பாகுபலி ராணா என வில்லன் கதாபாத்திரங்களும் அப்லாஸ் அள்ளும். ஹீரோக்களே வில்லன் கதாபாத்திரம் செய்ய விரும்புவர். அந்த வரிசையில் விக்ரமும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.