பீஸ்ட் – 12 நாட்களில் புதிய மைல்கல்லை எட்டிய அரபிக் குத்து பாடல்!
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் கடந்த 14-ஆம் தேதி வெளியாகி இருந்தது.
பாடல் வெளியாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் யூடியூப் தளத்தில் சுமார் 100 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த ட்வீட் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் பதிவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.அரபிக் குத்து பாடல் வெளியான நாள் முதலே பல்வேறு திரைப் பிரபலங்கள் நடிகர் விஜய் நடனம் ஆடியிருந்த நடன அசைவுகளை அழகாக கேட்ச் செய்து, அப்படியே நடனமாடி அதை வீடியோவாக பதிவு செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்திருந்தனர். அது கூட வைரலாகி இருந்தது. அனிருத், சமந்தா, அட்லீ, அரபிக் குத்து பாடலை பாடிய பின்னணி இசை பாடகி ஜோனிடா காந்தி ஆகியோர் இதில் அடங்குவர்.