பிரண்ட்ஷிப் விமர்சனம்

0
119

பிரண்ட்ஷிப் விமர்சனம்

ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யாஆகியோர் இணைந்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் பிரண்ட்ஷிப்.

இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், ஆக்ஷன்கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதிஷ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எம்.எஸ்.பாஸ்கர், பழ .கருப்பையா, வெங்கட் சுபா,மைம் கோபி , வேல்முருகன், வெட்டுக்கிளி  பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழிநுட்பக் கலைஞர்கள்:- இணைத்தயாரிப்பு – வேல்முருகன், ஒளிப்பதிவு – சாந்த குமார், இசை – டி.எம். உதயகுமார், படத்தொகுப்பு – தீபக் எஸ். தவாரக்நாத், கலை இயக்கம் – மஹேந்திரன்,வசனம் -பி.எஸ்.ராஜ்,சவுண்ட் டிசைன் – ஆனந்த், நடனம் – ஷாம் சூர்யா,ஆடை வடிவமைப்பு – வசந்த்,ஸ்டில்ஸ்- சிவா,நிர்வாக தயாரிப்பு – ரோபின், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.

கோவையில் உள்ள பொருயியல் கல்லூhயில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாம் ஆண்டில் சேருகிறார் லாஸ்லியா. அந்த வகுப்பில் இவர் மட்டுமே பெண் என்பதால் மற்றவர்கள் ஒதுங்கியே இருக்கின்றனர். நாளடைவில் லாஸ்லியா எல்லோரிடமும் அன்பாகவும், இனிமையாகவும் பழகி ஹர்பஜன்சிங், சதிஷ் உள்ளிட்ட நண்பர்கள் படை சூழ வலம் வருகிறார். இவரின் புன்சிரிப்பு பின்னால் அவரின் உடல் நலம் பற்றிய பெரிய அதிர்ச்சியை நண்பர்கள் கேட்க நேரிட அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருகிறார். ஆனால் அவரின் மகிழ்ச்சி நீடிக்காமல் மற்றொரு பேரதிர்ச்சி நண்பர்களை சிக்க வைக்கிறது. லாஸ்லியாவின் இறப்பிற்கு காரணம் நண்பர்களா? அல்லது கொலையா? அதற்காக காரணம் என்ன? என்பதை சொல்லியிருக்கும் படம பிரண்ட்ஷிப்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தன்னால் முடிந்தவரை புரிந்து நடித்திருக்கிறார்.
லாஸ்லியா ஜாலியாக கல்லூரி மாணவியாக வந்து தன் துயரத்தை மறந்து கலகலப்பாக வலம் வருவதும், இறுதியில் அவருக்கு ஏற்படும் விபரீதம் பேரதர்ச்சியை தந்து விடுகிறது.

முதல் காட்சியிலும், இறுதிக்காட்சியிலும் தோன்றும் ஆக்ஷன்கிங் அர்ஜுன் அசல் கிங் மேக்கராக படத்தில் ஜொலிக்கிறார்.

நண்பராக சதிஷ்,வில்லனாக ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா,வெங்கட்சுபா, மைம்கோபி, வேல்முருகன்,வெட்டுக்கிளி  பாலா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமாக அஸ்திவாரம் போட்டுள்ளனர்.
ஒளிப்பதிவு – சாந்த குமார், இசை – டி.எம். உதயகுமார் படத்தின் விறுவிறுப்பை பூர்த்தி செய்துள்ளனர்.

இயக்கம்-ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா. பெண்களின் சுதந்திரம் பகலில் மட்டும் தான் இரவில் இல்லை அதற்கு காரணம் சமூகத்தில் நிலவும் மனப்பான்மையை மாற்ற வேண்டும் ஆண் பெண் சமம் என்பதை உணர வேண்டும் என்பதை ஆணித்தரமாக க்ளைமேக்ஸில் சொல்லியிருந்தாலும், திரைக்கதையில் போதிய அழுத்தம் இல்லாமலும், சில கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் ஒட்டத்தை தடைகற்களாக இருப்பதை சரி செய்திருந்தால் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா படம் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் பிரண்ட்ஷிப் முழ்காமல் மிதக்கும் மெதுவான கப்பல் பயணம்.