பாடல் மூலம் நடிகர் மகேஷ்பாபு புதிய சாதனை

0
114

பாடல் மூலம் நடிகர் மகேஷ்பாபு புதிய சாதனை

நடிகர் மகேஷ்பாபு தனது புதிய படம் ‘சர்க்காரு வாரி’ பட மூலம் சாதனைகளை தொடங்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘கலாவதி’ பாடல் மிகக் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற தெலுங்குப் பாடல் என்ற சாதனையைப் படைத்தது.

இந்த பாடல் கடந்த மாதம் 13ம் தேதி யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. செவ்வாயன்று 100 மில்லியன் பார்வைகளை கடந்தது. இந்த சாதனையை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

‘கலாவதி’ பாடலுக்கு அனந்த ஸ்ரீராம் பாடல் வரிகளை வழங்க, தமன் இசையமைத்துள்ளார். சித் ஸ்ரீராம் பாடினார்.

இந்த பாடல் வரிகள் பாடகர்கள் மற்றும் முழு அர்ரெஸ்ட்ராவுடன் படமாக்கப்பட்டது. பாடலுக்கு மகேஷ் பாபு, கிர்த்தி சுரேஷ் ஜோடியும் சேர்ந்து இன்னொரு ஈர்ப்பாக அமைந்தது.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ், ஜிஎம்பி என்டர்டெயின்மென்ட், 14 ரீல்ஸ் ப்ளஸ் இணைந்து தயாரித்து, பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகிறது.