படப்பிடிப்பு முடிந்தது.. அறிவித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு 

0
122

படப்பிடிப்பு முடிந்தது.. அறிவித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு 

தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளன்ர். தனுஷ் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.