நெட்ஃபிளிக்ஸ்-இன் வரவிருக்கும் பிளாக்பஸ்டர் ஆக்ஷன் படமான ‘தி கிரே மேன்’-ல் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் முதல் தோற்றம்

0
150

நெட்ஃபிளிக்ஸ்-இன் வரவிருக்கும் பிளாக்பஸ்டர் ஆக்ஷன் படமான ‘தி கிரே மேன்’-ல் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் முதல் தோற்றம்

~ ரையான் கோஸ்லிங், கிரிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ், தனுஷ் மற்றும் பலர் நடித்து அந்தோனி & ஜோ ருஸ்ஸோ ஆகியோர் இயக்கிய இத்திரைப்படம் ஜூலை 22 அன்று நெட்ஃபிளிக்ஸ்-இல் மட்டும் வெளியாகிறது ~

ஏப்ரல் 27, 2022: நெட்ஃபிளிக்ஸ்-ஆனது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான தி கிரே மேன்-இன் முதல் தோற்றப் படங்கள் மற்றும் அதன் வெளியீட்டுத் தேதியையும் வெளியிட்டது. ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், இந்திய சூப்பர் ஸ்டார் தனுஷ் மற்றும் பலர் நடித்து, ஜோ & அந்தோனி ருஸ்ஸோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ஜூலை 22 அன்று நெட்ஃபிளிக்ஸ்-இல் மட்டும் வெளியாகிறது.

தி கிரே மேன் – ஒரு சிறு குறிப்பு

இயக்குநர்கள்: அந்தோனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ

திரைக்கதை எழுத்தாளர்கள்: ஜோ ருஸ்ஸோ, கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி

தயாரிப்பாளர்கள்: ஜோ ரோத், ஜெஃப்ரி கிர்சென்பாம், அந்தோனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ, மைக் லரோக்கா, கிறிஸ் காஸ்டால்டி

தயாரிப்பு நிர்வாகிகள்: பேட்ரிக் நியூவால், கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி, ஜேக் ஆஸ்ட், ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட், ஜெஃப் ஹேலி, சாக் ரோத் மற்றும் பாலக் படேல்

தழுவப்பட்ட புத்தகத் தொடர்: மார்க் கிரேனி-இன் தி கிரே மேன் எனும் புத்தகம்

நடிகர்கள்: ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மௌரா, தனுஷ், பில்லி பாப் தோர்ன்டன், ஆல்ஃப்ரே வுடார்ட், ரெஜி-ஜீன் பேஜ், ஜூலியா பட்டர்ஸ், எமி இக்வுகோர், ஸ்காட் ஹேஸ்

வெளியீட்டு தேதி | வெள்ளிக்கிழமை, ஜூலை 22

கதைச் சுருக்கம் | தி கிரே மேன் என்பவர் சியாரா சிக்ஸ் எனும் மற்றொரு பெயர் கொண்ட CIA ஆபரேட்டிவ் கோர்ட் ஜென்ட்ரி (ரியான் கோஸ்லிங்) ஆவார். ஃபெடரல் சிறைச்சாலையிலிருந்து கொணரப்பட்டு, அவரை ஆட்டுவிப்பவரால் பணியமர்த்தப்பட்ட  டொனால்ட் ஃபிட்ஸ்ராய் (பில்லி பாப் தோர்ன்டன்), ஜென்ட்ரி என்பவர் ஒரு காலத்தில் மிகவும் திறமையான, ஏஜென்சியால் அனுமதிக்கப்பட்ட ஆயுத வியாபாரி ஆவார். ஆனால் இப்போது காட்சிகள் மாறிவிட்டன. மற்றும் சிக்ஸ் என்பவரைக் குறிவைத்து, CIA-வின் முன்னாள் விசுவாசியான லாயிட் ஹேன்சன் (கிறிஸ் எவன்ஸ்) மூலம் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டது. அவரை வெளிக்கொணரும் வரை இவரை எதுவும் தடுக்க முடியாது. சக கூட்டாளியாக டானி மிராண்டா (அனா டி அர்மாஸ்) அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். அவருக்கு அது தேவைப்படும்.

ரியான் கோஸ்லிங், தி கிரே மேன் ஆகவும் மற்றும் கிறிஸ் எவன்ஸ், அவரது சமூகவிரோத வில்லனாகவும் தோன்றும் இத்திரைப்படமானது, நெட்ஃபிளிக்ஸ்/AGBO-ஆல் தயாரிக்கப்பட்ட திரில்லர் ஆகும். இது ஆன்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் ரெஜி-ஜீன் பேஜ், பில்லி பாப் தோர்ன்டன், ஜெசிகா ஹென்விக், தனுஷ், வாக்னர், வாக்னர் மற்றும் ஆல்ஃப்ரே வூட்டார்ட் ஆகியோருடன் அனா டி அர்மாஸ்-யும் நடித்துள்ளார். மார்க் கிரேனி-இன் தி கிரே மேன் எனும் நாவலைத் தழுவி, ஜோ ரூசோ, கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோரின் திரைக்கதையில் உருவாகியுள்ளது. ஜோ ரோத், ஜெஃப்ரி கிர்சென்பாம், ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ, மைக் லரோக்கா மற்றும் கிறிஸ் காஸ்டால்டி ஆகியோர் இதன் தயாரிப்பாளர்களாவர். பேட்ரிக் நியூவால், கிறிஸ்டோபர் மார்கஸ், ஸ்டீபன் மெக்ஃபீலி, ஜேக் ஆஸ்ட், ஏஞ்சலா ரூசோ-ஓட்ஸ்டாட், ஜெஃப் ஹேலி, சாக் ரோத் மற்றும் பாலக் படேல் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகிகளாவர்.

Netflix.com/TheGrayMan

#தி கிரேமேன்

@NetflixFilm

நெட்ஃபிளிக்ஸ் – ஒரு சிறு குறிப்பு:

நெட்ஃபிளிக்ஸ்-ஆனது 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் மொபைல் கேம்ஸ் ஆகியவற்றை பலதரப்பட்ட விதங்கள் மற்றும் மொழிகளில் அதன் 222 மில்லியன் கட்டண உறுப்பினர்களை மகிழ்விப்பதற்கான உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாகும். உறுப்பினர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணையத்துடன் இணைக்கப்பட்ட திரையில் விரும்பிய மட்டும் பார்க்கலாம். மேலும், உறுப்பினர்கள் விளம்பரங்கள் மற்றும் எவ்வித கட்டுப்பாடுமின்றி ப்ளே செய்யவோ, இடைநிறுத்தவோ அல்லது பார்ப்பதை மீண்டும் தொடரவோ முடியும்.