நடிகை குஷ்புவின் புது அவதாரம்.. வாழ்த்தும் பிரபலங்கள்

0
106

நடிகை குஷ்புவின் புது அவதாரம்.. வாழ்த்தும் பிரபலங்கள்

90-களின் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் வருஷம் 16, மைக்கல் மதன காமராஜன், சின்ன தம்பி, அண்ணாமலை போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன்பின் அவ்னி சினி மேக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார். இந்த நிறுவனத்தின் சார்பாக கலகலப்பு, அரண்மனை போன்ற படங்களை தயாரித்தார். குஷ்புவின் கணவராக இயக்குனர் சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் புதிய படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகை குஷ்பு புதிய அவதாரமொன்றை எடுத்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் மீரா என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் இதன் கதையையும் குஷ்பு எழுதியுள்ளார். நடிகை, தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி குஷ்பு கதாசிரியராக களம் இறங்கியிருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்து, பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.