தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி… கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

0
68

தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி… கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் இந்த ஆண்டு இறுதியில் தங்கள் திருமணத்தை அறிவிக்க வாய்ப்புள்ளது என்பது தான் இன்றைய ஹாட் நியூஸ். ஆம்! இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து, கடைசியாக திருமணம் செய்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.

’சென்னையில் வாழ்ந்து வந்த அவர்கள் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது, ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நல்ல தேதியில் அவர்கள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். வரும் மாதங்களில் அவர்களது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்’ என கெளதம், மஞ்சிமாவுக்கு நெருக்கமான ஒருவர் பிரபல நாளிதழுக்கு தெரிவித்திருக்கிறார்.

காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், கவுதம் மற்றும் மஞ்சிமாவின் காதல் குறித்து வெளியாகியுள்ள இச்செய்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் அவர்களது திருமணம் நடக்கும் என்று சிலர் தெரிவித்தாலும், அதை மஞ்சிமா மறுத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் திருமணம் நடக்காது என்று அவர் மறுத்தாலும், கெளதம் கார்த்திக்குடனான தனது உறவை அவர் மறுக்கவில்லை. கெளதம் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், திருமண ஏற்பாடு நடந்தால், அதைத் தானே மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.