டெடி விமர்சனம்

0
255

டெடி விமர்சனம்

சக்தி சவுந்தர் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் டெடி. இந்த படத்தில் ஆர்யா மற்றும் சயீஷா சைகல் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்திலும், இவர்களுடன் கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஸ்டண்ட், ஒளிப்பதிவு எஸ்.யுவா, பாடல்கள் கார்கி, எடிட்டிங் டி.சிவாநந்தீஸ்வரன், கலை எஸ்.எஸ்.மூர்த்தி. தயாரிப்பு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் ஆதனா ஞானவேல்ராஜா.

கல்லூரி மாணவியான ஸ்ரீவித்யா (சாயீஷா), ஒரு விபத்தில் சிக்குகிறார். அப்போது அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவின் சதிச் செயலால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கோமா நிலைக்கு செல்லும் சயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. கோமா நிலையில் இருக்கும் அவரை அந்த கும்பல் கடத்திச் செல்கின்றனர்.

டெடிக்குள் ஆத்மா தஞ்சம் அடைந்ததும் அதற்கு நடக்கும், பேசும் திறன் கிடைத்துவிடுகிறது. இதையடுத்து அந்த டெடி பியர், புத்திசாலி இளைஞன் சிவாவை (ஆர்யா) சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது. சிவாவும் அதற்கு உதவ முன்வருகிறார். இருவரும் சேர்ந்து ஸ்ரீவித்யாவை கண்டு பிடித்தார்களா, மீண்டும் ஸ்ரீவித்யாவாக மாறுகிறாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஓசிடி பாதிக்கப்பட்டவராக ஆர்யா புத்திசாலி இளைஞனாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கல்லூரி மாணவியாக வரும் சாயீஷாவுக்கு படத்தில் அதிக வேலையில்லை. ஒரு சில காட்சிகளே வந்துவிட்டு செல்கிறார்.

டெடியாக நடித்தநடிகர் ஈ.பி.கோகுலன் கதாபாத்திரத்தின் மீது வசீகரிப்பு ஏற்படுத்தி, டெடியின் அசைவுகளை சிறப்பாக செய்து மொத்த படத்திற்கும் உயிர் ஊட்டியுள்ளார்.

வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி, டாக்டராக சாக்ஷி அகர்வால், நண்பர்களாக சதிஷ் மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு வேலை குறைவே என்றாலும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள்.

டி.சிவாநந்தீஸ்வரன் எடிட்டிங்கில் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். எஸ்.எஸ்.மூர்த்தி. கலை உழைப்பு தெரிகிறது.

சக்தி சரவணனின் சிறப்பான ஸ்டண்ட் காட்சிகளும், எஸ்.யுவாவின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.

இமானின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. பாடல்கள் கார்கி, ஓகே.

மருத்துத்துறையில் நடக்கும் உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியா கதையை மெடிக்கல் கிரைம் த்ரில்லராக ஒரு டெடி பியர் பொம்மை வைத்து வித்தியாசமாக கதை சொல்ல முயற்சி எடுத்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன். முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், டெடி படம் நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவே உருவாக்கும் போது, இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி மேருகேற்றியிருக்கலாம்.

மொத்தத்தில் ஸ்டுடியோ கீரின் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் ஆதனா ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளிவந்துள்ள டெடி ஒரு நல்ல பொழுது போக்கு படமாக நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும்.