சேசிங் விமர்சனம்

0
749

சேசிங் விமர்சனம்

ஏசிய இன் மீடியா சார்பில் மதியழகன் முனியாண்டி தயாரித்து சேசிங் படத்தை இயக்கியிருக்கிறார் கே.வீரகுமார்.

இதில் வரலட்சுமி சரத்குமார், பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:-வசனம்-பொன்பார்த்திபன், இசை-தசி, ஒளிப்பதிவு-ஈ.கிருஷ்ணமூர்த்தி, எடிட்டிங்-பாலசுப்ரமணியன், க்ரேசன், சண்டை-சூப்பர் சுப்பராயன், ஆக்ஷன் பிரகாஷ், நடனம்-ராதிகா, பாடல்கள்-விவேகா, முத்துலிங்கம், பிஆர்ஒ-விஜய்முரளி, நிகில் முருகன், கிளாமர் சத்யா.

உயர் போலீஸ் அதிகாரியின் மகளை கடத்தும் கும்பலிடமிருந்து போலீஸ் அதிகாரியான வரலட்சுமி காப்பாற்ற அதற்காக உயர் போலீஸ் அதிகாரியின் ஒப்புதலுடன் அந்த கும்பலை பிடிக்கும் அதிகாரத்தை பெறுகிறார். தன்னுடன் பணியாற்ற போலீஸ் குழுவுடன் அவர்களை தேடிச் செல்கிறார். இந்த தேடலில் போதை கும்பலும், பெண்களை கடத்தி போதைமருந்தை செலுத்தி பலாத்காரம் செய்யும் கும்பலையும் கண்டுபிடித்து கைது செய்ய போகும் போது அந்த நபர்களை கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர்.அதற்கு உடந்தையாக இருந்த முக்கியாமான கும்பல் தலைவனை பிடிக்க மலேசியா செல்கிறார். அங்கே போலீஸ் குழுவையே கடத்தி மறைத்து வைக்க, வரலட்சுமி தனி ஆளாக அவர்களை எப்படி மீட்டார்? தன் பணியை செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வரலட்சுமி ஆக்ஷன் குயினாக படம் முழுவதும் பறந்து பறந்து சண்டை போட்டு உழைப்பை கொடுத்திருக்கிறார். இவருடன் பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா என்று ஏகப்பட்ட பேர் கொடுத்த வேடங்களுக்கு ஏற்ப நடித்து கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

தசியின் இசையும் ரசிக்க வைக்க, கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு படத்தின் அசத்தலான துரத்தல் காட்சிகளுக்கு உத்தரவாதம் தந்து மெருகேற்றியுள்ளனர்.

இயக்கம்-கே.வீரகுமார். குற்றவாளிகளை சங்கிலி தொடர் போல் தொடர்ந்து சென்று துரத்திப் பிடிப்பதையே சேசிங் திரைக்கதை. இதில் போதைப்பொருள், பலாத்காரம், கொலை என்று செல்லும் கதையில் சென்டிமெண்ட் கலந்து துரத்தல் பயணத்தில் இறுதியில் சஸ்பென்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வீரகுமார்.

மொத்தத்தில் சேசிங் துரத்தல் கலந்த ஆக்ஷன் கில்லர்.

ALSO READ:

முன்னா விமர்சனம்