சுந்தர்சி, ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான வேட்டைகள் ஆரம்பம்  பாடல்!!

0
207

சுந்தர்சி, ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான வேட்டைகள் ஆரம்பம் பாடல்!!

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.  கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘வேட்டைகள் ஆரம்பம் ‘ எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது..

நவநீத் சுந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பா .விஜய்  பாடல்வரிகளை எழுதியுள்ளார் .பாடகர் நிவாஸ் மற்றும் நவநீத் சுந்தர் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர் .

பாடல் வரிகள் :

Verse 1:
யாரோ நீ யாரோ தீய தூதனே
சாவின் ராஜாங்கம் ஆளும் தேவனே
ஈரம் இல்லாமல் கொல்லும் ஜீவனே
கண்ணில் பாதாளம் காட்டும் மாயனே

யாரோ நீ யாரோ தீய தூதனே
சாவின் ராஜாங்கம் ஆளும் தேவனே
ஈரம் இல்லாமல் கொல்லும் ஜீவனே
கண்ணில் பாதாளம் காட்டும் மாயனே

Pre chorus 1:
கெஞ்சிக் கேட்டால் கொஞ்சிக் கொஞ்சி
கொன்று தீர்ப்பான் இந்த நல்லவன்
மூச்சில்லாமல் பேச்சில்லாமல்
மேலே சேர்ப்பதில் மேதையானவன்

Chorus:
வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
யாரிவன் கோட்டைக்குள் போனாலும்
மண்ணோடு மண்ணாகும் பேரின்பம்

வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
மூச்செல்லாம் பேச்செல்லாம் நின்றாலும்
மொத்தத்தில் உள்ளத்தில் சந்தோஷம்

ஆ….

Interlude Rap:
அஞ்சி அஞ்சி அஞ்சி ஓடி வா
கெஞ்சிக் கெஞ்சிக் கத்திக் கதறி வா
மொத்தமாகக் கூறு போடவா
பாதிப் பாதியாகக் கொல்லவா

Verse 2:
வேண்டும் சூடான ரத்தம் வேண்டுமே
அங்கம் எங்கெங்கும் பொங்க வேண்டுமே
அள்ளித் தாகங்கள் தீர வேண்டுமே
மீண்டும் கொல்லாமல் கொல்ல வேண்டுமே

Pre Chorus 2:
ரத்தம் தொட்டு வர்ண ஜாலம்
செய்து வைப்பான் இந்த ஓவியன்
ஆசை தீர ஆயுள் ரேகை
அழித்துப் பார்ப்பதில் இன்பமானவன்

Chorus:
வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
யாரிவன் கோட்டைக்குள் போனாலும்
மண்ணோடு மண்ணாகும் பேரின்பம்

வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
மூச்செல்லாம் பேச்செல்லாம் நின்றாலும்
மொத்தத்தில் உள்ளத்தில் சந்தோஷம்

End chorus:
வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
யாரிவன் கோட்டைக்குள் போனாலும்
மண்ணோடு மண்ணாகும் பேரின்பம்

வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
மூச்செல்லாம் பேச்செல்லாம் நின்றாலும்
மொத்தத்தில் உள்ளத்தில் சந்தோஷம்

ஆ….

நடிகர்கள் – சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து – இயக்கம் – பத்ரி
தயாரிப்பு  – அவனி டெலி மீடியா -. குஷ்பூ சுந்தர்
ஒளிப்பதிவு -கிருஷ்ணசுவாமி ,
இசை -நவநீத் சுந்தர்,
எடிட்டிங் – பென்னிஆலிவர் ,
சண்டைப்பயிற்சி ராஜசேகர்,
திரைக்கதை -நரு. நாராயணன், மகா கீர்த்தி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்