சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் – இயக்குநர் பேரரசு

0
121

சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் – இயக்குநர் பேரரசு

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் வழங்கும் “முதல் மனிதன்” இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது…

இந்த மேடையை பார்க்க, மிகவும் சந்தோஷமாக உள்ளது. அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். முதல் மனிதன் படத்திற்கான வெற்றி இங்கேயே ஆரம்பித்து விட்டது. ஜாதி கலவரத்தை தூண்டுவதை இப்போது சினிமாவிலும் ஆரம்பித்து விட்டார்கள். அது நல்ல விசயம் இல்லை. ஜாதி கலவரத்தை தூண்டும் படங்கள் வரும் சமயத்தில் சாதியே இல்லை என இப்படம் வருவது மகிழ்ச்சி. சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஜாதியை உயர்த்தி இன்னொரு ஜாதியை தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தை தயாரிப்பாளர்கள் தயாரிக்க கூடாது. மக்கள் ஆதரவு தராதீர்கள். இந்துவாக பிறந்ததால் நான் இந்துவாக இருக்கிறேன். என் அப்பா காட்டிய தெய்வத்தை நான் வழிபடுகிறேன் இதில் என் தவறு எங்கு இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முதல் மனிதன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.