சமந்தா கிளாமரிலும் கலக்கல் காஸ்டியூமிலும்  நடனத்திலும் கவனம் ஈர்க்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பாடல்

0
148

சமந்தா கிளாமரிலும் கலக்கல் காஸ்டியூமிலும்  நடனத்திலும் கவனம் ஈர்க்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பாடல்

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீவள்ளி என்ற பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இம்மாதம், 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்தின் பாடல்களும் ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.

ஏற்கனவே, இப்படத்தின் ‘ஸ்ரீவள்ளி’, ‘சாமி’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில், மூன்றாவது பாடலாக ‘o antava’பாடல் வெளியாகியுள்ளது. கிளப் பாடலாய் உருவாகியுள்ள இப்பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியிருக்கிறார்.

ஏற்கனவே, இயக்குநர் சுகுமாரின் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் சமந்தாதான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் சமந்தா கிளாமரிலும் கலக்கல் காஸ்டியூமிலும் கவனம் ஈர்க்கிறார். வெளியான 1 மணி நேரத்திலேயே ஒன்னரை மில்லியன் பாடல்களைக் கடந்துள்ளதோடு 9 ஆயிரம் கமெண்ட்ஸ்களையும் நெருங்கிக்கொண்டிருக்கிறது.