தமிழ் என் இரண்டாவது தாய்மொழி – நடிகர் ராம்சரண்

0
177

தமிழ் என் இரண்டாவது தாய்மொழி – நடிகர் ராம்சரண்

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்).

இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் தானய்யா ஆகியோர் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “RRR” திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. நேற்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்ற்கான , பிரமாண்ட முன்னோட்ட விழாவில், இயக்குநர் S S ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா, நடிகர் ராம்சரண், நடிகர் ஜீனியர் என் டி ஆர், ஆலியாபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் ராம்சரண் பேசியதாவது…

இங்கு வந்து தமிழக ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. ராஜமௌலி உடன் எப்போது வேலை பார்த்தாலும் அது சவாலானதாக தான் இருக்கும். அவர் ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக தெளிவாக வரையறை செய்திருப்பார். அது எப்படி திரையில் வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். இப்படத்தில் வரலாற்று நாயகர்களை ஹீரோவாக படைத்திருக்கிறார். அதை திரையிலும் சரியாக கொண்டு வர நாங்கள் உழைத்திருக்கிறோம். படத்தில் வேலை செய்த போது சில காட்சிகளில் நடிக்கும் போது, என் டி ஆர் ஃப்ரீயாக இருப்பார் அதை பார்த்த போது, அவரது கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய்மொழி, இப்படத்தில் தமிழில் பேசியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. தமிழ் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள்.