சக்சஸ் ஸ்டார் விஜய்சேதுபதி – 60 ஆண்டு கால கலைப்பூங்கா பெருமைமிகு சிறப்பான சாதனை புகழாரம்

0
233

சக்சஸ் ஸ்டார் விஜய்சேதுபதி
60 ஆண்டு கால கலைப்பூங்கா
பெருமைமிகு சிறப்பான சாதனை புகழாரம்
சூப்பர் காம்போ பான் பெருமை மாமனிதன்
மகிழ்ச்சியான உயர்ந்த ராயல் சல்யூட் –

கலைப்பூங்கா டி.என்.இராவணன் அவர்கள் 90-வது பிறந்த நாளில் கலைப்பூங்கா சார்பாக மாமனிதன் விஜயசேதுபதிக்கு ‘பான் சக்சஸ் ஸ்டார்” மகுடம் சூட்டி பெருமைப்படுத்தி புகழாரம்!!

70 ஆண்டு கால பத்திரிகை உலகில் சிறப்பாக வாழ்ந்து சாதனைப் படைத்த கலைப்பூங்கா இராவணன் அவர்கள்  தமது 90வது பிறந்த நாள் பரிசாக சூப்பர் காம்போ மாமனிதன் சொக்கத்தங்கம் விஜய்சேதுபதி அவர்களுக்கு ‘பான் சக்சஸ் ஸ்டார்” என்று அடையாளம் கண்டு பெருமைப்படுத்தி கலைப்பூங்கா ‘ஒப்பில்லா தங்கமணி” என்று புகழாரம் மகுடம் சூட்டியுள்ளார்.

மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரும் போய்விட்டார்கள் என்று கலங்கிய தமிழ் சினிமா உலகம் – போன அவர்கள் பாதி வழியில் சொக்கத்தங்கம் மாமனிதனாக திரும்பி வந்து மாஸ், வில்லத்தனம்,காமெடி, குணச்சித்திரம், சென்டிமெண்ட் போன்ற தமிழ் சினிமா உலகமே வியக்கும் வண்ணம் ஆச்சர்யப்படும் வகையில் சொக்கத்தங்கம் நடிப்பிலும் அசத்துகின்ற  கலக்கல் கேரக்டர்களில் விஜயசேதுபதி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் மற்றும் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா போன்றவர்களுடனும், தெலுங்கில் சூப்பர் ஹீரோ அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா-2ம் பாகத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிக்கும் ஜவானி படத்திலும் இணைந்து பான் இந்தியா வில்லனாக மவுசு கூடியுள்ளது. எல்லா முன்னணி நடிகர்களிடமும் இணைந்து நடித்து தனது இமேஜை பற்றிக் கவலைப்படாமல் சூப்பர் காம்போ நடிகராக, அந்த படங்களுக்கு உயிர் நாடியாக நடித்து வருகிறார்.

தனது நவரச நடிப்புகளால் ரசிகர்களை அசர வைத்து மாகோன்னத பாராட்டுதல்களை பெற்று வரும் அவரை கலைப்பூங்கா டி.என்.இராவணன் தனது 90வது பிறந்த நாளில் கலைப்பூங்கா சார்பில் ‘பான் சக்சஸ் ஸ்டார்” (PAN SUCCESS STAR) என்று மகுடம் சூட்டி பான் இந்தியா நடிகராக பெருமைப்படுத்தி ராயல் சல்யூட் அடித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.