க் விமர்சனம்க் விமர்சனம்: முடிவில் தான் த்ரில்லான அனுபவத்தை கொடுக்கிறது க்

0
134

க் விமர்சனம்: முடிவில் தான் த்ரில்லான அனுபவத்தை கொடுக்கிறது க்

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன், பிரபு இணைந்து தயாரித்திருக்கும் க் படத்தின் கதையை எழுதிய இயக்கியிருக்கிறார் பாபுதமிழ்.
புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன், குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரா, மதன் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசை-கவாஸ்கர் அவிநாஷ், எடிட்டர்-மணிகுமரன் சங்கரா, கலை-கலை தேவா, பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.

தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் வசந்த் சந்திரசேகர் (யோகேஷ்). முக்கியமான போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் போது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரை காதல் மனைவி தன்யா வசந்த்(அனிகா விக்ரமன்) கவனித்து கொள்கிறார். பெரும் பணக்காரரான வெளிநாட்டில் வசிக்கும் அவரது தந்தை குரு சோமசுந்தரத்தை வசந்தை கவனித்துக் கொள்ள அனுப்புகிறார். வசந்த் மருத்துவமனை அறையில் ஜன்னல் வெளியே கொலையை பார்க்கிறார் அதனை மனைவி மற்றும் போலீசிடம் கூற அனைவருமே கொலை எதுவும் நடைபெறவில்லை என்று சொல்கின்றனர். அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் வசந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்கிறார். அங்கேயும் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு உதவியாக இருக்கும் குரு சோமசுந்தரத்தை முதலில் தவிர்த்தாலும், வசந்த் நாளடைவில் அவரின் பேச்சை கேட்க தொடங்குகிறார். அதன் பின் நடக்கும் மாற்றங்கள் என்ன? வசந்தின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

யோகேஷ் விளையாட்டு வீரருக்கு உரித்தான உடல்வாகுடன், மனதளவில் பாதிக்கப்பட்டு கவலைப்படுவதும், நிறுத்தி நிதானமாக பேசுவது, புரியாத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு குழப்படைவது, மனஉளைச்சலில் தவிப்பது என்று புதுமுகம் என்று தெரியாதவாறு தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.

அனிகா விக்ரமன் யோகேஷின் மனைவியாக அன்பாகவும், கண்டிப்புடனும் நடந்து கொள்கிறார். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன், முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் சில இடங்களில் மிகையான நடிப்பு தெரிகிறது. திருப்புமுனை கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் டாக்டராக மதன் பாபு நடிப்பு சிறப்பு.
கே.எஸ்.ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு அசத்தல் ரகம். கவாஸ்கர் அவினாஷ் இசை கேட்கும்படி உள்ளது.

மணிகுமரனின் எடிட்டிங் காட்சிபடுத்திய விதம் கொஞ்சம் குழப்பமாக தெரிந்தாலும், இறுதியில் தான் ஒரு முழுமையான கதை புரிய ஆரம்பிக்கிறது.

உளவியல் சம்பந்தமாக உலகளவில் ஏராளமான படங்கள்; வந்திருந்தாலும்,அதை காட்சிப்படுத்தும் விதம் புரிந்தால் மட்டுமே படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படும். இல்லையென்றால் புரியாத புதிராக தான் தோன்றும். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றும் ஒரு கால் பந்தாட்;ட வீரருக்கு முன்னரே சிறு சிறு சம்பவங்களாக தெரிய வர,   அதனை கோர்வையான அனுபவமாக உளவியல் மற்றும் கற்பனை கலந்து கொடுத்திருந்தாலும், சாமான்யத்தில் புரியும் படியாக இல்லாததே குறையாக இருக்கிறது. இதைத்தவிர்த்து பார்த்தால் பல திருப்பங்களுடன் ஆச்சர்யம் கலந்து இயக்கியிருக்கிறார் பாபு கணேஷ்.

மொத்தத்தில் தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன், பிரபு இணைந்து தயாரித்திருக்கும் க் முடிவில் தான் த்ரில்லான அனுபவத்தை கொடுக்கிறது.