கொரோனா பாதிப்பால் இயக்குனர் தாமிரா மரணம்

0
156

கொரோனா பாதிப்பால் இயக்குனர் தாமிரா மரணம்

மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் தாமிரா. இவர், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குனர்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார். இதன்பின் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கியிருந்தார் தாமிரா.

அண்மையில் இயக்குனர் தாமிராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை, இயக்குனர் தாமிரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 53. அவரது மரணம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையிலிருந்து நேராக திருநெல்வேலிக்கு கொண்டுசெல்லப்படுகிறார். அவரது சொந்த ஊரில் இயக்குநர் தாமிராவின் இறுதிப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.