கூர்மன் விமர்சனம்: கூர்மன் தலைப்புக்கேற்றவாறு சுவாரஸ்வம் குறையாமல் அழுத்தமாக பதிவு செய்து அசத்தியிருக்கும் எமகாதகன்
எம்.கே.எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதனகுமார் தயாரித்து கூர்மன் படத்தை எமுதி இயக்கியிருக்கிறார் பிரையன்.பி.ஜார்ஜ்.
இதில் ராஜாஜி , ஜனனி ஐயர், பாலா சரவணன், ஆடுகளம் நரேன் ,பிரவீன் , முருகானந்தம், சூப்பர்குட் சுப்ரமணி , சதீஷ் பிரபு , பிரதீப் கே.விஜயன் , விஜய சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு : சக்தி அரவிந்த், எடிட்டர்: எஸ்.தேவராஜ், கலை இயக்குனர்: கோபி கருணாநிதி, சண்டைக்காட்சிகள்: ஸ்டன்னர்சாம், ஒலி வடிவமைப்பு மற்றும் மிக்ஸ் : தாமஸ் குரியன், ஆடை வடிவமைப்பு: டினா ரொசாரியோ, ஒப்பனை: யு.கே.சசி, உடைகள் : ஜே. அப்பாராவ் சதீஷ், வண்ணம்: யுகேந்திரன், பாடல் வரிகள்: உமா தேவி, பிரையன் பி. ஜார்ஜ், தயாரிப்பு நிர்வாகி: டி.நரசிம்மன், நிர்வாகத்தயாரிப்பாளர்கள்: எஸ்.கணேஷ், சதீஷ் பிரபு, இணைதயாரிப்பு: சுரேஷ் மாரிமுத்து, இயக்குனர் குழு: வி.ஜே.நெல்சன், ராகேஷ் நாராயணன், கே.எஸ்.சதீஷ், ரித்திக்செல்வா, இன்பேன்ட் ஜல்ஸ், மக்கள் தொடர்பு : பரணி அழகிரி, திருமுருகன்.
காந்தலூரில் 12 ஏக்கர் நிலபரப்பில் அடர்ந்த செடிகொடிகள் நடுவே பழமையான சிதலடைந்த பண்ணை வீட்டில் ராஜாஜி, பாலாசரவணன் மற்றும் செல்லபிராணி சுப்புவுடன் வசிக்கின்றார். இறந்து போன காதலி ஜனனி ஐயரின் நினைவுகளோடு ராஜாஜி வாழ்கிறார். உளவுத்துறையில் போலீஸ்காரராக பணியாற்றி தன் வாழ்க்கையில் நடந்த சோக சம்பவத்தால் பாதிக்கப்பட்டு பணியிலிருந்து விலகி 13 வருடங்களாக அந்த வீட்டில் தனியாக இருக்கிறார். ராஜாஜிக்கு எதிரில் இருப்பவர் மனதில் என்ன நினைக்கிறார், என்ன மறைக்கிறார் என்பதை கண்டறியும் அபூர்வ சக்தி இருப்பதால் அவ்வவ்போது உயர் அதிகாரி ஆடுகளம் நரேன் சிக்கலான விசாரணை கைதிகளை ராஜாஜியிடம் ஒப்படைத்து உண்மையை கண்டு பிடித்து நல்ல பெயர் வாங்கிக் கொள்வார். எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வராத ராஜாஜி,விசாரணை கைதிகளை தன் இருப்பிடத்திற்கு வரவழைத்து கொடூரமாக விசாரித்து உண்மையை வீடியோவாக எடுத்து கொடுப்பதில் கில்லாடி.அதன்படி மாணவி ஒருவரை ஆசிட் வீசி கற்பழித்து கொன்றதாக கூறப்படும் விசாரணை கைதியை கொண்டு வந்து ராஜாஜியிடம் ஒப்படைக்கின்றனர். அந்த விசாரணக்கைதி தப்பித்து விட சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஆடுகளம் நரேன், ராஜாஜியை கிடுக்குப்பிடி போட்டு கைதியை கண்டுபிடித்துக் தருமாறு நெருக்கடி கொடுக்கிறார். வேறு வழியில்லாமல் அந்த பண்ணை வீட்டு வெளியே வரும் ராஜாஜி விசாரணைக் கைதியை கண்டுபிடித்தாரா? உண்மையாக குற்றவாளி யார்? அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? அதனால் அவருக்கு ஏற்பட்ட சோகம் என்ன? ராஜாஜி வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.
ராஜாஜி தனாவாக சோகமே உருவான இருக்கமான முகத்துடன், ஏனோதானோவென்று சாப்பிட்டு உறங்கி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் கதாபாத்திரம். அவரின் அபாரமான விசாரிக்கும் திறமை, கண்டறியும் திறன், அவருக்கு பின் இருக்கும் சோக கதை என்று படம் முழுவதும் அசத்தலாக பங்களிப்பை கொடுத்துள்ளார். இவருடன் நடித்திருக்கும் சுப்பு என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் இப்பொழுது உயிரோடு இல்லை என்ற சோகத்திலும் படத்தில் சவாலாக நடித்துள்ளது.
பால சரவணன் வயதான தோற்றத்தில் ராஜாஜிக்கு விஸ்வாசமாக சேவை செய்து கொண்டு கொடுத்த வேலையை கனகச்சிதமாக கண் அசைவிலேயே முடித்துக் கொடுத்து அசத்திவிடுகிறார்.
ஜனனி ஐயர் சில காட்சிகள் என்றாலும் வலுவான காரணத்தோடு கதைக்குள் இருக்கிறார். உயர் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அதிகாரமும், அதட்டலும், பணிவும் நிறைந்த கேரக்டர் சிறப்பு. மற்றும் பிரவீன் , முருகானந்தம்,சூப்பர்குட் சுப்ரமணி , சதீஷ் பிரபு , பிரதீப் கே.விஜயன் , விஜய சங்கர் ஆகியோர் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.
உமா தேவி, பிரையன் பி. ஜார்ஜ் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.
சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு பண்ணை வீடு, அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், பாதாள அறை, விசித்திரமான விசாரணைகள், சம்பவங்கள் என்று தன் காமிரா கோணங்களால் அசத்தலான காட்சிகள் பிரம்மிப்பில் ஆழ்த்தி விடுகிறது.
எடிட்டர்: எஸ்.தேவராஜ், கலை இயக்குனர்: கோபி கருணாநிதி ஆகியோர் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள்.
மென்டலிஸ்ட் (மனதை நினைப்பதை சொல்பவர்) என்ற கதைக்களத்தைக் கொண்டு போலீஸ் துறைக்கு சார்ந்தவாறு திரைக்கதையமைத்து, அதை சாதகமாக பயன்படுத்தி கொலையாளி, தேடல், சஸ்பென்ஸ் கலந்து ஒவ்வொரு பின்னணியிலும் ஒரு திருப்புமுனையாக கொண்டுவந்து க்ளைமேக்சில் சிறப்பாக முடித்துள்ளார் இயக்குனர் பிரையன். பி.ஜார்ஜ். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு சவுக்கடி கொடுத்து வித்தியாசமான அணுகுமுறை, எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு உளவியல் த்ரில்லர் கதையை புதிய கோணத்தில் புதிய முயற்சியில் கொடுத்து கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் பிரையன்.பி.ஜார்ஜ்.ஹாட்ஸ் ஆஃப்.
மொத்தத்தில் எம்.கே.எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதனகுமார் தயாரித்திருக்கும் கூர்மன் தலைப்புக்கேற்றவாறு சுவாரஸ்வம் குறையாமல் அழுத்தமாக பதிவு செய்து அசத்தியிருக்கும் எமகாதகன்.