கசிந்த பீஸ்ட் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்

0
107

கசிந்த பீஸ்ட் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் புகைப்படங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வந்தது. இது படக்குழு மத்தியிலும் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் டப்பிங் அமர்வின் போது எடுக்கப்பட்ட படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கசிந்த புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என படக்குழுவினரும் ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.