ஆபரேஷன் ஜுஜுபி விமர்சனம்

0
473

ஆபரேஷன் ஜுஜுபி விமர்சனம்

மனைவி வினோதினி மற்றும் மகளிடம் தான் கண்ட அரசியல் கலந்த கற்பனைக்கதையை சாம்ஸ் சொல்கிறார். அதில் தன் நண்பர் படவா கோபியிடம் எல்லாம் இருந்தும் ஏனோ சந்தோஷமாக வாழ முடியவில்லை என்று வறுத்துபடுகிறார் சாம்ஸ். அப்பொழுது படவா கோபி மனோதத்துவ மருத்துவரை சென்று பார்க்குமாறு கூறுகிறார். அந்த சமயத்தில் கடவுளான மனோபாலா தோன்றி ஜுஜுபி என்ற பானத்தை கொடுக்கிறார். அதன் மூலம் இந்தியாவை மாற்ற நினைக்கிறார் சாம்ஸ். அதற்காக தேர்தல் சமயத்தில் பல கெடுபிடிகளை கொடுத்து பல பெரிய அரசயில்கட்சிகள் போட்டியிட முடியாமல் விலகிக்கொள்ள செய்து ராகவ் என்ற இளைஞரை பிரதமராக தேர்ந்தெடுக்க செய்கிறார் சாம்ஸ். பிரதமர் ராகவ் எடுக்கும் முடிவுகள் எல்லா துறைகளிலும் பல மாற்றங்களையும், சிந்தனைகளையும் கொண்டதாகவும், வித்தியாசமாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருக்க இந்தியா பலவகையில் முன்னேற தொடங்கி விடும் என்று தன் ஆசையை சொல்லி கதையை முடிக்கிறார். இதுவே படத்தின் சாராம்சம்.
காமெடி நடிகராக பார்த்த சாம்ஸ் இந்த படத்தில் ஆங்கிலம் பேசும் சீரியசான கதாபாத்திரத்தில் கொஞ்சம் அமைதியாக  சிந்திக்கக்கூடிய மனிதராக படம் முழுவதும் பிராதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நன்றாக உள்ளது.

மனைவியாக வினோதினி, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாக வையாபுரி, வெங்கட் சுபா, இயக்குநர் சந்தானபாரதி, நண்பராக படவா கோபி, அரசியல் ஆலோசகராக ஜெகன், கடவுளாக மனோபாலா என முன்னணி காமெடி நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பங்களிப்பை கனகச்சிதமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் புரியும்படி பேசி அசத்தியுள்ளனர்.

பிரதமராக நடித்திருக்கும் ராகவின், அழுத்தம் திருத்தமான ஆங்கில உச்சரிப்பும், திட்டங்களும் மிகவும் கவர்கிறது.

ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், புதிய இடங்களைத் தேடிப் பிடித்துப் படமாக்கியிருக்கும் விதம் அருமை.

படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீPதர் படத்தின் சில இடங்களில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இசை, கலர் மிக்ஸிங், ஒலி கலவை உள்ளிட்ட 12 பணிகளோடு கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் அருண்காந்த், ஒரு சாதராண குடிமகன் சந்தோஷமாக இருந்தால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும் என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அருண்காந்த்.  மேஜிக்கலான மாஸ்டர் பிளான் ஜுஜுபி அதன் மூலம் இந்தியாவை ஒரு மகிழ்ச்சி மிக்க நாடாக எப்படி மாற்றுகிறார்கள், என்பது தான் கதை. வித்தியாசமான திரைப்படமாக இருப்பதோடு, புதிய முயற்சியாகவும், சோதனை முயற்சியாகவும் வந்திருக்கிறது.

மொத்தத்தில் ஆபரேஷன் ஜுஜுபி ஆங்கிலம், தமிழ் கலந்த கலவையில் சிகிச்சை பெற்று சந்தோஷமாக வெளிவர வாழ்த்துக்கள்.