ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகிறது S.J.சூர்யா – யாஷிகா ஆனந்த் நடித்துள்ள கடமையை செய்

0
101

ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகிறது S.J.சூர்யா – யாஷிகா ஆனந்த் நடித்துள்ள கடமையை செய்

கணேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் TR ரமேஷ் அவர்களும் நஹர் பிலிம்ஸ் சார்பில் ஜாகீர் உசேன் அவர்களும் இணைந்து தயாரிக்கும் படம் “கடமையை செய்”.
கதாநாயகனாக S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மற்றும் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி , அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுந்தர்.C யிடம், உதவியாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியதோடு அவரை நாயகனாக வைத்து ” முத்தின கத்திரிக்காய் ” என்ற வெற்றிப் படத்தை இயக்ககிய வேங்கட் ராகவன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

நெடுநல்வாடை, எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு N.B ஸ்ரீகாந்த் , தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார், பாடல்கள் அருண்பாரதி, சண்டை பயிற்சி பிரதீப் தினேஷ், நடனம் தீனா – சாண்டி, மக்கள் தொடர்பு மதுரைசெல்வம், மணவை புவன் , கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் TR ரமேஷ், ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

எல்லோரும் அவங்க அவங்க கடமையை செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுக்கான பலன் தானாகத் தேடி வரும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தில் எஸ்ஜே.சூர்யாவிற்கு டபுள் டைம் ஸ்டிராங் கேரக்டர். அவர் இப்படித்தான் இருப்பார் என்ற மனநிலையில் இருப்பீர்கள் ஆனால் இந்த படத்தில் அவர் அப்படி இருக்க மாட்டார், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் அவருக்கு. ஃபேமிலி ஆடியன்ஸ்ல இருந்து அத்தனை பேரையும் கவர்ந்து இழுக்கிற படமா எல்லா ஜானரையும் இதில் வைத்துள்ளோம். படம் இம்மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.