நான் இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன், அவர்களை தாண்டி நான் எதையும் செய்ய மாட்டேன் – நடிகர் SJ சூர்யா

0
128

நான் இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன், அவர்களை தாண்டி நான் எதையும் செய்ய மாட்டேன் – நடிகர் SJ சூர்யா

T.R.  ரமேஷ் & S.ஜாஹிர் ஹுசைன்  தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில், இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் காமெடி டிராமா திரைப்படம் “கடமையை செய்”.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொள்ள் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நாகர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜாகீர் ஹுசைன்  பேசியதாவது..,
இந்த படத்தை முடிக்க எனக்கு பெரிய உதவியாய் இருந்தது எஸ் ஜே சூர்யா தான். சம்பளத்தை வெகுவாக குறைத்து, பல செலவுகளை கட்டுபடுத்தி இந்த திரைப்படத்திற்காக பெரிய பங்களிப்பை கொடுத்தார்.  படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்.

நடிகை ரேகா நாயர் பேசியதாவது..,
“எஸ் ஜே சூர்யா சாருடன் நடிப்பதற்கு வாய்ப்பு தந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கிளாமர் இல்லாமல்  நம்ம வீட்டில் இருக்கும் ஒரு  குடும்ப பெண்ணாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் சிறப்பான பணியை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒளிப்பதிவாளர்  வினோத் ரத்தினசாமி பேசியதாவது…
இந்த படத்தில் கிடைத்த அனுபவம் மிகப்பெரியது. இந்த படத்தின் கதை கேட்டவுடன் நான் இதில் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். படத்தின் கதாநாயகன், கதாநாயகி இருவரும் ஒளிப்பதிவு மெருகேற பெரிய உதவியை கொடுத்தனர். தயாரிப்பாளர் எனக்கு தேவையான அனைத்து விஷயங்களையும், குறுகிய நேரத்தில் செய்து கொடுத்தனர். இயக்குனர் உடைய காமெடி உணர்வுக்கு நான் ரசிகன். இந்த படத்தில் காமெடி, டிவிஸ்டு, ஆக்‌ஷன், திரில்லர் என அனைத்தும் கதையிலும் இருந்தது, படத்திலும் அது சிறப்பாக  வந்துள்ளது. யாஷிகா மிகசிறந்த நடிகை. ஒட்டுமொத்த படக்குழுவே மிகச்சிறப்பான ஒரு குழுவாக செயல்பட்டுள்ளனர். இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நன்றி

இசையமைப்பாளர் அருண் ராஜ் பேசியதாவது..
“படத்தின் பின்னணி இசையை முப்பது நாளில் முடித்துவிட்டோம், அதற்கு காரணம் இயக்குனர் தான். அவரிடம் நல்ல தெளிவு இருந்தது. நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு நான் பெரிய ரசிகன். அவருடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும், சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். படத்தில் செக்கியூரிட்டி பாடல் ஒன்று இருக்கிறது, பாடல் நன்றாக வந்துள்ளது. இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்கள் ஆதரவு தாருங்கள்.

இயக்குனர் வெங்கட் ராகவன் கூறியதாவது..,
தயாரிப்பாளர் T.R.  ரமேஷ் மிகவும் சுறுசுறுப்பான நபர், இன்னொருவர்  S.ஜாஹிர் ஹுசைன்  விவேகம் நிறைந்தவர். இவர்கள் இருவரும் திரைப்படத்தை மெருகேற்ற பெரிய உழைப்பை கொடுத்தனர். இந்த படம் கொரோனா காலத்தில் எடுத்தோம், அப்போது பல சிக்கல்கள் எழுந்தது, அதையெல்லாம் சரி செய்து இந்த படத்தை முடித்தோம். இந்த படத்திற்காக ஒரு மருத்துவமனை செட் போட்டோம், அதற்கு தயாரிப்பாளர் மிகவும் உறுதுணையாய் இருந்தார்கள். ஒளிப்பதிவாளர் வேகமாகவும் இருப்பார், அதேநேரத்தில் சிறப்பான காட்சிகளையும் தருவார். இந்த படத்தை கோர்த்து படத்தொகுப்பாளர் ஶ்ரீகாந்த் சிறப்பான படைப்பாக தந்துள்ளார். இசையமைப்பாளர் படத்திற்கென பிரத்யேகமான பல இசைகளை கொடுத்துள்ளார். இந்த படத்திற்காக பல சிறந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். படத்தில் சின்ன நடிகர்கள் கூட கவனத்தை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள். யாஷிகாவிற்கு இந்த படத்தில் நர்ஸ் கதாபாத்திரம், அவர்களை இந்த படத்திற்காக டெஸ்ட் சூட் செய்த போது, எங்களை ஆச்சர்யப்படுத்தினார். இந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தியுள்ளார்.  இப்படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக யாஷிகா ஆனந்தை பாராட்டுவார்கள்.  எஸ் ஜே சூர்யா சார் அல்டிமேட் பர்பார்மர், அவர் ஒரு நடிகராக கதைக்குள் வருவார். சினிமாக்காக  அர்பணிப்போடு பணிபுரிவார் அவருக்கு இப்படம் மிகப்பெரும் பாராட்டை தரும். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

யாஷிகா ஆனந்த் கூறியதாவது..,
பல போராட்டங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிறது. முதன்முதலில் இந்த படக்கதையை என்னிடம் கூற வந்த போது, என்னால் இந்த பாத்திரத்தை பண்ண முடியுமா ? என பயந்தேன். ஆனால் செட்டில் இயக்குனர் என்னை சிறப்பாக நடிக்க வைத்தார். எஸ் ஜே சூர்யா சார் பண்பான மனிதர், அதோடு திறமையானவர். ஒவ்வொரு நாளும் அவருடன் பணிபுரியும் போது, அது நிறைய சொல்லி தருவார். எனக்கு ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற அடையாளம் இருந்தது,  அது இந்தப்படம் மூலம் மாறும்.  இந்த படத்தில் நான் பெரிய உழைப்பை கொடுத்துள்ளேன். இனிமேல் எனக்கு  நிறைய நல்ல  படங்கள் வருமென நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் உடைய ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும். இந்த படம் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ஆக இருக்கும். கண்டிப்பாக படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்.

நடிகர் SJ சூர்யா பேசியதாவது…
தயாரிப்பாளர் ரமேஷ் சார் மிகச்சிறந்த திறமைசாலி. இந்த படம் அவருடைய உழைப்பால் உருவான படம். இவருக்கு பக்கபலமாக இருந்தது ஜாகீர் உசேன். இயக்குனர் வெங்கட் இந்த கதையை சொல்லும் போது, இந்த கண்டெண்ட் முக்கியமான ஒன்று என என்னால் உணர முடிந்தது. என் மனதுக்கு பிடிக்காத எந்த ஒரு விசயத்தையும் நான் இதுவரை செய்ததே இல்லை.  இந்த கதை தனித்துவமான ஒன்று. இந்த படத்தில் நடிக்க வேண்டுமென தோன்றியது.  இந்த பாத்திரம் வித்தியாசமானது, ஒரு வகை கோமோவில் இருக்கும் பாத்திரம்  அமைதியாய் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். டப்பிங் பேசும்போது என் வாய் அசையாது தொண்டை அசைந்திருக்கும் அதற்கேற்றாற் போல் பேசினேன். இந்தப்படம் மிக வித்தியாசமான படம்.  நான் இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன், அவர்களை தாண்டி நான் எதையும் செய்ய மாட்டேன். இந்த படம்  ஹிட், கண்டிப்பாக இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகும்.  அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது..,
இந்த காலகட்டத்தில் சினிமாவை விமர்சிப்பவர்கள் நாகரீகம் தாண்டி பேசுகிறார்கள். அடுத்த வீட்டு பெண்களை,  பற்றி பேச இவர்கள் யார் ?  கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது மாற வேண்டும். இதை சொல்ல வேண்டியது கடமை.  எஸ் ஜே சூர்யா ஒரு மிகச்சிறந்த இயக்குனர், ஆனால் இப்போது நடிகனாகி வெற்றி பெற்றிருக்கிறார்,  அவருடைய நடிப்பு மிக நுட்பமாக இருக்கிறது. இயக்குனர் சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படத்தை உருவாக்கியுள்ளார். நடிகை யாஷிகா நல்ல பண்புள்ள மனிதர். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், தயாரிப்பாளர் என அனைவருடைய உழைப்பினால் இந்த படம் உருவாகியுள்ளது. சூர்யா உடைய உழைப்பு இந்த படத்தை வெற்றியடைய வைக்கும். இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும்.”

நடிகர்கள் –  எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத், சேசு, ராஜசிம்மன் மற்றும் பலர்

தொழில் நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு –  T.R.  ரமேஷ் & S.ஜாஹிர் ஹுசைன்
இயக்குநர் – வெங்கட் ராகவன்
ஒளிப்பதிவு –  வினோத் ரத்தினசாமி
எடிட்டர்  – ஸ்ரீகாந்த். N.B
இசை – அருண் ராஜ்
பாடல் வரிகள் –  அருண் பாரதி
ஸ்டண்ட் மாஸ்டர் – பிரதீப் தினேஷ்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – தனகோடி, ஆர்.பி.வெங்கட், மாதவன், சிவக்குமார், குணா

மக்கள் தொடர்பு – மணவை புவன்
ஆடைகள் – குமார்
VFX&Di – ஸ்ரீ கலசா ஸ்டுடியோ
ஒலி கலவை – நாக் ஸ்டுடியோஸ் உதய்குமார்.