அவரால் ஹேம மாலினியாக முடியாது: ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருக்கு பதிலடி

0
71

அவரால் ஹேம மாலினியாக முடியாது: ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருக்கு பதிலடி

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரம் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. வருகிற 7-ந்தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் 10-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதேபோல், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி பா.ஜனதாவை வீழ்த்திவிட திட்டமிட்டுள்ளது. அந்த கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். இது அகிலேஷ் யாதவுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

அகிலேஷ் யாதவ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்தி, நான் ஹேமமாலினியாக இருக்க விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஹேம மாலினி, ‘‘உண்மையிலேயே, அவரால் ஆக முடியாது. அது மிகவும் கடினம். கனவு கன்னியாக நான் அதிகம் உழைத்துள்ளேன். ஜெயந்த் சவுத்ரியால் ஹேம மாலினியாக முடியும் என நினைக்க முடிகிறதா?. அவர் சொல்வது சரிதான்’’ என்றார்.

ஹேம மாலினி எம்.பி. தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டசபை இடத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி ‘‘நான் ஹேம மாலினியாக விரும்பவில்லை. நீங்கள் மக்களுக்காக என்ன செய்தீர்கள்?. உயிரிழந்த ஏழு விவசாயிகள் குடும்பங்களுக்கு என்ன செய்தீர்கள்? அஜய் மிஷ்ரா இன்னும் ஏன் அமைச்சராக உள்ளார்?’’ எனத் தெரிவித்திருந்தார்.

ஹேம மாலினி பதில் அளித்த நிலையில், ஜெயந்த் சவுத்ரி, ‘‘ஹேமா மாலினியை கேலி செய்ய எண்ணியதில்லை’’ என்று பதில் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான ஹேம மாலினி ஒரு காலத்தில் கனவு கன்னியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.