‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த அபிமன்யு சிங்

0
151

‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த அபிமன்யு சிங்

‘தர்பார்’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் அபிமன்யு சிங் இணைந்திருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகளவில் நடித்துள்ள அபிமன்யு தமிழில் விஜய்யின் ‘வேலாயுதம்’, ‘தலைவா’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்தாலும் அதிகம் கவனம் ஈர்த்தது எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம்தான். கொடூர கொள்ளைக்காரராய் நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்த நிலையில், அபிமன்யு சிங் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.