அசால்ட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளும் நடிகை மேகா ஆகாஷ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மேகா ஆகாஷ். இவர் அடுத்ததாக சிம்புவுடன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் மூலம் மீண்டும் மக்களிடம் தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, நடிகை மேகா ஆகாஷ் தற்போது ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ’மழை பிடிக்காத மனிதன்’ உள்பட ஐந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அதே சமயம் இவர் தனது தாயார் தயாரிக்கும் சொந்தப்படத்திலும் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக சொந்த படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷின் இந்த படத்தை இயக்குனர் சுஷாந்த் ரெட்டியின் உதவியாளர் அபிமன்யு ரெட்டி இயக்கி வருகிறார்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் மிகவும் வைரலானது. ஏனென்றால், அந்த போஸ்டரில் நடிகை மேகா ஆகாஷ் கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு அசால்ட்டாக ஊதித் தள்ளும் ஸ்டில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் தங்களது கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.