சங்கமம் 2024: இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியம் மற்றும் படைப்பாக்கத்தை வெளிப்படுத்தும் கலை விழா!
இந்நாட்டில் கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் ஒரு சிறப்பான முன்முயற்சியான சங்கமம் என்பதன் 7-வது பதிப்பை, ஷிபுலால் ஃபேமிலி பிலந்தராஃபிக் இனிஷியேட்டிவ்ஸ் (SFPI) – ஐ 2024 பிப்ரவரி 10, சனிக்கிழமையன்று பெங்களூருவின் செயிண்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியத்தில் நடத்தியது. இந்நிகழ்வில் துருபத் விற்பன்னர் பாண்டிட் உதய் பாவால்கர் உடன் கிரித் சிங் மற்றும் சுகாத் மனிக் முண்டே ஆகியோரும் பங்கேற்றனர்.
பெங்களூரு மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சாஸ்த்ரிய சங்கீத ஆர்வலர்களும், ரசிகர்களும் இந்த துருபத் இசை நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்தனர். அத்துடன், பண்டிட் உதய் பால்வால்க்கர் மற்றும் அவரது இசைக் குழுவினரை சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் அவர்கள் பெற்றனர்.
துருபத் வாய்ப்பாட்டில் முதன்மையான கலைஞர்களாக நாடெங்கிலும் அறியப்படும் பண்டிட் உதய் பால்வால்க்கர், இந்த இசை வடிவத்திற்கு உலகெங்கிலும் வளர்ந்து வரும் அங்கீகாரம், பிரபல்யம் மற்றும் மீட்சியின் முக்கிய நபராக இருந்து வருகிறார். துருபத் இசை பாரம்பரியத்தின் தூண்களாக கருதப்படும் உஸ்தாத் ஜியா ஃபரிதுதீன் டாகர் (வாய்ப்பாட்டு) மற்றும் உஸ்தாத் ஜியா முகைதீன் தாகர் (ருத்ர – வீணை) ஆகியோரின் சீடர் இவர். துருபத் இசையின் ராகத்திலும், லயத்திலும் முழுவதுமாக மூழ்கும்போது நமது சுயம் அதில் கரைந்து போகிறது மற்றும் இசை மட்டுமே முழுமையாக வியாபித்திருக்கிறது என்று பண்டிட் உதய்ஜி நம்புகிறார். ரசிகர்களை ஈடுபாடு கொள்ளச்செய்யும் பாங்கிற்காக பெரிதும் மதிக்கப்படும் பண்டிட் விஜயம், அவரது இசையின் வழியாக மாறுபட்ட பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த ரசிகர்களோடு கலந்துரையாடி, அவர்களது மனங்களுக்குள் ஊடுருவியிருக்கிறார். 1985-ம் ஆண்டில் போபால் – ல் நடைபெற்ற அவரது முதல் அரங்கேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற எண்ணற்ற பிரபல இசை விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் துருபத் இசைக் கச்சேரிகளை உதய் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.
இந்த இசை நிகழ்ச்சியை நடத்தும் அறக்கட்டளை அமைப்பை தொடங்கிய நிறுவனர்களான குமாரி ஷிபுலால் மற்றும் SD ஷிபுலால் ஆகியோரின் மாபெரும் இசை பேரார்வத்தின் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட சங்கமம், நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் மீது விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் அதனை பாதுகாக்கவும் முனைகின்ற அதே வேளையில், பரந்து விரிந்த மக்களுக்கு இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தையும் மற்றும் மாறுபட்ட கலை வடிவங்களையும் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்ற குறிக்கோளை கொண்டிருக்கிறது.
SFPI – ன் நிறுவனரான குமாரி ஷிபுலால், சங்கமம் நிகழ்வு பற்றிய தனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்கையில், “மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மகத்தான திறனை இசை கொண்டிருக்கிறது; எல்லைகளையும், வேறுபாடுகளையும் கடந்து ஒரு பொது தளத்தினை உருவாக்கும் ஆற்றல் கொண்டது இசை. ஷிபு மற்றும் நான் ஆகிய இருவருமே இந்திய சாஸ்த்ரிய சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். இந்திய கலாச்சாரம் மற்றும் இசை பாரம்பரியத்தின் மீதான எமது மதிப்பும், அபிமானமுமே சங்கமம் நிகழ்விற்கான விதையை சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மனங்களில் விதைத்தது. இந்த முன்னெடுப்பின் வழியாக, இந்திய இசை மற்றும் நடன வடிவங்களின் செழுமையால் உத்வேகம் பெற்றிருக்கும் கலாரசிகர்களை சென்றடைவது எமது நோக்கமாகும்.” என்று கூறினார்.
தனது நேரடி துருபத் இசை நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்த பண்டிட் உதய், “கலாரசிகர்களை சந்திப்பது என்பது, எப்போதுமே மனநிறைவளிக்கும் ஒரு இனிய அனுபவமாக இருந்து வருகிறது. இசைக்கல்வியாளராகவும், இசை நிகழ்ச்சியை மேடைகளில் நிகழ்த்துபவராகவும் 40 ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழகான, தொன்மையான கலைவடிவத்தை மக்களோடு பகிர்ந்து கொள்வது அளவற்ற மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூரு நகரம் எப்போதுமே இசையையும், கலையையும் பெரிதும் பாராட்டி வரவேற்கும் அமைவிடமாக இருந்து வருகிறது. சங்கமம் நிகழ்வில் எங்களது இசைக்கச்சேரியை நடத்துவது உண்மையிலேயே பெருமகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற முன்னெடுப்புகள், கலை, கலைஞர்கள் மற்றும் கலாரசிகர்களுக்கிடையே எழக்கூடிய இடைவெளியை நிரப்பும் திறன்கொண்டவை என்றே கூறவேண்டும்.” என்று கூறினார்.
வடஇந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் மிகத்தொன்மையான, வாழும் பாரம்பரிய கலை வடிவங்களுள் ஒன்றாக துருபத் திகழ்கிறது. மிகத்தொன்மையான இந்திய தத்துவங்கள் மற்றும் அதன் கலை சார்ந்த விழுமிய அமைப்புகளிலிருந்து இந்த இசை வடிவத்தின் வேர்கள் கிளைத்தெழுந்திருக்கின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சாம வேதத்திலிருந்து இந்த இசைவடிவம் உருவெடுத்திருக்கிறது.
தொன்மையான குரு சிஷ்ய பரம்பரை வடிவத்தில் துருபத் இசையை கற்பிக்கின்ற முறையை ஊக்குவிக்கவும் மற்றும் அதனை உயிரோட்டத்துடன் வைத்திருக்கவும் ‘துருபத் ஸ்வர்குல்’ என்ற பெயரில் ஒரு உள்ளுறை குருகுலத்தை பண்டிட் உதய் நிறுவியிருக்கிறார். துருபத் என்ற இந்த கலை வடிவத்தை தேர்வு செய்யப்பட்ட மற்றும் தகுதியுள்ள சாதகர்களுக்கு கற்பிக்கவும், அவர்களுக்கு பயிற்சியளிக்கவும் வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். ‘குரு – சிஷ்ய பரம்பரா’ என்பது, காலம் கலமாக மதிப்புமிக்க அறிவையும், திறனையும், தத்துவ கோட்பாடுகளையும் சீடர்களுக்கு கற்பிக்கும் ஒரு மிக முக்கியமான இந்திய கல்வி செயல்முறையாகும். துருபத் என்ற இந்த அழகான கலை வடிவத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதற்காக துருபத் ஸ்வர்குல் உடன் SFPI இணைந்து ஒத்துழைப்போடு செயலாற்றி வருகிறது.