பிரபல பின்னணிப் பாடகி சித்ரா, இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்டோருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான Jeppiaar Icon Awards வழங்கப்பட்டன

0
160

பிரபல பின்னணிப் பாடகி சித்ரா, இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்டோருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான Jeppiaar Icon Awards வழங்கப்பட்டன

சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகத்தில்  “Jeppiaar Icon Awards” வழங்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் திரைப்பட  பின்னணிப் பாடகி சித்ராவுக்கு விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட  அவர் தனது மயக்கும் குரலால் 2 பாடல்களைப் பாடி மாணவர்களை மெய்மறக்கச் செய்தார்.
 சேலம் ஆர்ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்ட விருதை அவரது மகன் மோகன்ராஜ் பெற்றுக்கொண்டார்.
மேலும் சீனிவாசராஜ், டாக்டர் வைஷ்ணவி சங்கர், டாக்டர் கவிதா கௌதம், பரத்வாஜ் ரங்கன், விஜய் கபூர், திருமதி ராஜலட்சுமி ரவி, விக்ரம் அருள் வித்யாபதி, மாஸ்டர் லிடியன் நாதஸ்வரம் ஆகியோருக்கு ஜேப்பியார் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ரெஜினா ஜே.முரளி  மற்றும் திரு.முரளி சுப்ரமணியன்,  செல்வி மார்க்கரெட் ரெஜினா, செல்வி மேக்லின் ரெஜினா ஆகியோர் வழங்கினார்கள்.
விருதை பெற்றுகொண்ட லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க அவரது தந்தை தென்பாண்டி சீமையிலே மற்றும் தென்றல் வந்து தீண்டும்போது ஆகிய பாடல்களைப் பாடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை பரவசப்படுத்தினார்.
விழாவில் ஜேப்பியார் பல்கலைக்கழக இணை வேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர், கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் துறைத் தலைவர்கள், பேராசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.