ஜெர்மனியில் நடைபெற்ற  சமையல் ஒலிம்பிக் – 2024 போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற   சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரேயா அனீஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

0
168
ஜெர்மனியில் நடைபெற்ற  சமையல் ஒலிம்பிக் – 2024 போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற   சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரேயா அனீஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை  முகாம் அலுவலகத்தில், ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக் – 2024 போட்டியில் (Culinary Olympics) இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு  தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ரேயா அனீஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாணவி ஸ்ரேயா அனீஸ் முதல்வரின் உருவ படத்தை தர்பூசணி பழத்தில் செதுக்கி அதை முதல்வருக்கு அன்பளிப்பாக கொடுத்து பாராட்டையும் பெற்றார்.
கடந்த 124 ஆண்டுகளாக ஜெர்மனியில் நடந்து வரும் கலினரி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் பெறுவது இதுவே முதன்முறை .
கடந்த  14 வருடங்களாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் சிறந்து  விளங்கிக் கொண்டிருக்கும் சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் மாணவி ஸ்ரேயா அனீஸ் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.
உடன் சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் தலைவர் திரு.பூமிநாதன், தலைமைச் செயல் அலுவலர் திருமதி.கவிதா நந்தகுமார் மற்றும் சமையல் கலை நிபுணர் திரு. கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.