ஆர்.சி.சி. மேக்னம் அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மேக்னத்தான் தொடர்ஓட்டத்த்தை சென்னை பெருநகர மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் ஆர்.சி.சி. மேக்னம் தலைவர் விஷால் பூத்ரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

0
165
ஆர்.சி.சி. மேக்னம் அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மேக்னத்தான் தொடர்ஓட்டத்த்தை சென்னை பெருநகர மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் ஆர்.சி.சி. மேக்னம் தலைவர் விஷால் பூத்ரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய  வேலை வாய்ப்பை எதிர்நோக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பயிற்சி மையங்கள்  மூலம் திறன்மேம்பாடுப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தரும் ஆர்.சி.சி. மேக்னம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த மேக்னத்தான் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளியில் தொடங்கியது.
ஆர்.சி.சி. மேக்னத்தின் தலைவர் விஷால் பூத்ரா, செயலாளர் விகாஸ் ரூன்வால் மற்றும் மெக்னத்தான் இயக்குனர் ஆஷிஷ் ஜெயின் ஆகியோர் ஒருங்கிணைக்க நடைபெற்ற மேக்னத்தானில், லைஃப் ஸ்டைல் ஹவுசிங் நிர்வாக இயக்குநர் பிரியங்க் பிஞ்சா, சம்பத்ராஜ்ஜி சிங்வி உள்ளிட்ட பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் ஒன்றிணைந்து திறன் இடைவெளியை குறைக்கவும், அனைத்து சமூகங்களையும் மேம்படுத்தவும் கூட்டு முயற்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது சமூக-பொருளாதார சவால்களை எதிர் கொள்பவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்கான முன்னெடுப்பாக நடத்தப்பட்டது.
இந்த மேக்னத்தானில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பங்கேற்கும் வகையில் 1.5 கி.மீ தூரம் முதல் 5, 10 மற்றும் 21 கிமீ தொலைவு வரையிலான பிரிவுகளில் சுமார் 2500 பேர்  பங்கேற்று  விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு,  ஆற்றல்மிக்க சூழலை உருவாக்கவும் உறுதி ஏற்றனர்.
ஆர்.சி.சி. மெக்னம் அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டுமுதல் ஏற்கனவே 250 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து,   பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு உதவியது.
திவா யோகாவின் நிறுவனர்  சர்வேஷ் ஷஷி தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஓட்டத்திற்கு முன்னும் பின்னும் அறிவுரைகள் வழங்கி வழிநடத்தினார்.
 பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்குவதற்காக நீர்ச்சத்து நிலையங்கள் மற்றும் முதலுதவி வசதிகள் சீரான இடைவெளியில் அமைக்கப்பட்டு இருந்தது.