சென்னையில் உள்ள 40 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சிம்ஸ் மருந்தகங்கள்

0
142

சென்னையில் உள்ள 40 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சிம்ஸ் மருந்தகங்கள்

சென்னை: சென்னையில் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்தகங்களை சிம்ஸ் மருத்துவக் குழுமம் அமைக்கிறது.

அதன்படி, மருந்துகள் மட்டுமன்றி மருத்துவ சேவைகளையும், ஆலோசனைகளையும் அங்கிருந்தபடி பயணிகள் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி, மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் விக்ரம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (இயக்கம், அமைப்பு) ராஜேஷ் சதுா்வேதி, திட்ட இயக்குநா் டி.அா்ச்சுனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக, சிம்ஸ் துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி கூறியது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான மருத்துவ சேவைகளை சிம்ஸ் மருத்துவமனை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது. மருத்துவமும், மருந்தும் கைக்கு எட்டாமல் இருக்கக்கூடாது. அதன்படி இந்த புதிய முன்னெடுப்பின் மூலமாக பயணிகள் தடையற்ற சுகா தார அனுபவத்தை பெறுவார்கள். பொதுவிடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாஸ்டர் ஹெல்த் செக் பரிசோத னையில் 20 சதவீதம் (குறிப்பிட்ட பரிசோதனைகளுக்கு) தள்ளுபடி அளிக்கவும் உள்ளோம். அதன் தொடா்ச்சியாக மருந்தகங்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கவுள்ளது. வாடிக்கையாளா் சேவையில் உயா் தரம், தனிப்பட்ட அணுகுமுறைகள், தானியங்கி முறையில் மருந்து சீட்டுகளைக் கையாளுதல் என செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் அவை செயல்பட உள்ளன. விரைவில் அந்த மருந்தகங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.