9 மாத தி.மு.க ஆட்சியில் ₹1.4 லட்சம் கோடி முதலீடுகள்.. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம்!

0
111

9 மாத தி.மு.க ஆட்சியில் ₹1.4 லட்சம் கோடி முதலீடுகள்.. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம்!

தி.மு.க. ஆட்சியில் முதல் 9 மாதங்களிலேயே ரூ.1,07,610 கோடி தொழில்துறையில் முதலீடு செய்யப்பட்டு, நாட்டிலேயே தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று பாராட்டி, “தி டைம்ஸ் ஆப் இந்தியா” நேற்று முன்தினம் சிறப்புக் கட்டுரை வெளி யிட்டுள்ளது.

“தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேட்டின் 7.2.2022 தேதி யிட்ட இதழில் “மின்சார வாகனங்கள் துறையில் பெரும் எழுச்சி, திரும்பி வரும் வாடிக்கையாளர்களும், புதிய வாடிக்கையாளர்களும் அரசு பொறுப் பேற்ற 9 மாதங்களில் தமிழ்நாட்டில் 1.4 லட்சம் கோடி நடப்பு நிதி ஆண்டில் முதலீடு செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் முதலீடு 2.0 தான் உண்மையான முதலீட்டு மாநாடாக அமைந்துள்ளது என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் கூறியிருப்பதாவது :-

மற்றொரு முதலீட்டு எழுச்சி!

தாராளமயமாக்கல் மூலம் தமிழ்நாட்டுக்கு உலகத் தயாரிப்பாளர்களைக்கொண்டு வந்து சேர்த்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கால் நூற்றாண்டு கழித்து, மற்றொரு முதலீட்டு, எழுச்சி, தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலம் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை தேசிய அளவிலான முதலீட்டு விகிதத்தை ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 2021 ஆம் ஆண்டில் பெற்றுள்ளது. குஜராத்துக்கும், ஆந்திரப்பிரதேசத்துக்கும், மகாராஷ்டிரத்திற்கும் மேலாக “புராஜக்ட்ஸ் டுடே” நடத்திய கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு முதலீட்டில் அதிக வளர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.

மொத்த முதலீடு, 1,43,902 கோடி அளவுக்கு 304 திட்டங்கள், ஓராண்டு காலத்திற்குள் 36,292 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது. தமிழ்நாடு 1,07,610 கோடி முதலீட்டை நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் பெற்றுள்ளது. இத்துடன் ஏறக்குறைய சுமார் 2 மில்லியன் (ஆயிரம் லட்சம் கோடி கரைப்பதற்காக (திரவத்தில்) தனியார் துறையில் தண்ணீரில் தனியார் பங்குகளிலும் வி.சி. நிதியிலும் சேர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் முதலீடு என்பது உண்மையான முதலீடு என்பதை அறியலாம்.

மின்சார வாகனத்துறை மூலம் ஏற்பட்ட எழுச்சி, 19,868 கோடி முதலீட் டைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால், ஆட்டோ மொபைல் உற்பத்தி, ஐ.டி. மற்றும் எலக்ட்ரானிக் துறை களிலும் ஏரோ பேஸ் (விமானப் போக்கு வரத்து) பாதுகாப்பு, ஜவுளி, மருந்து தயாரிப்பு, தொழில் மற்றும் உடல் பகுப்பாய்வு துறை யிலும் மற்றும் பொது உற்பத்தி துறைகளிலும் முதலீடுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

அவர்களில் பலர் மாநிலத்தில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்பவர்கள், உதாரணமாக ராயல் என்ஃபீல்டு 70 ஆண்டுகள் உறவின் மூலம் 3 தொழிற்சாலைகளை ஏற்கனவே பெற்றுள்ளன. அதன் செயல் இயக்குநர் பி.கோவிந்தராஜன், அரசின் ஆதரவு ஒரு முக்கிய அம்சம், ராயல் என்பீல்டு மீண்டும் மீண்டும் முதலீடு செய்வதற்கு என்று கூறியுள்ளார். மாநில அரசின் இலகு வான கொள்கைகள் தொழில் சிறக்க உதவுகிற வாய்ப்புகளையும் திறந்து விடுகிறது. பெருமள விலான உதிரி பாகங்கள் சப்ளை செய்பவர்கள், சுற்றுச் சூழல் அமைப்புகளும் முக்கிய காரணங்கள்.

மீண்டும் மீண்டும் முதலீடு செய்யும் நிறுவனங்கள்!

பல நிறுவனங்கள் மீண்டும் முதலீடு செய்துள்ளன. எலக்ட்ரானிக் நிறுவனங்கள் என சிர்மா டெக்னாலஜி இரண்டு தொழிற்சாலை களைக் கொண்டுள்ளது. 80 முதல் 85 சதவீதம் உற்பத்தியை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. அதன் தொழிற்சாலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைந்துள்ளன. அவை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ளன. சிர்மா டெக்னாலஜி நிறுவனத்தில் சி.இ.ஓ. சரவணன் சீனிவாசன் அடுத்த 2, 3 ஆண்டுகளில் ரூ.800 கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட் டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அரசின் பி.எல்.ஏ. திட்டத்தின்கீழ் அது முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன் சொந்த வளர்ச்சித் திட்டங்களை ஐ.ஓ.பி. உற்பத்திப் பொருட்களான லெமாரி ஏ.சி. மற்றும் மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியிலும் ஈடுபடவுள்ளது.

இன்ஜினியரிங் எம்.என்.சி., தையல் பிரிவு 350 கோடியில், செய்யாறில் இப்போதுதான் ஒரு தொழிற்சாலையைக் கட்டியுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர் வி.ஜி. செந்தில் குமார் 1999 முதல் தமிழ் நாட்டில் முதலீடு செய்து வருவதாகக் கூறியுள்ளார். அந்தத் தொழிற்சாலையை இந்தியாவில் மத்தியில் அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து பின்னர் திட்டமிட்டபடி மத்தியபிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் அமைக்க திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் அதை செய்யாற்றில் அமைத்திடலாம். மும்பை துறைமுகத்தில் நிறைய அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. காலதாதமதம் ஆகிறது. செய்யாற்றில் நிலம் போட்டிக்கு உரியதாக இருந்தாலும் 39 லட்சத்தில் முடிந்து விட்டது. மற்ற இடங்களில் அது 2 முதல் 6 மடங்கு அதிகம் ஆகிறது.

ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள்!

யோட்டோ உள்கட்டமைப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் டேட்டா சென்டர் பார்க் ஒரகடத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. யோட்டா நிறுவனம் 3000 முதல் 4000 கோடி வரை முதலீடு செய்யவுள்ளது. 8 முதல் 10 ஆண்டு களில் சுமார் 2000 முதல் 2500 வரை நேரடி வேலைவாய்ப்புகளும், இதன் மூலம் கிடைக்கும் மறைமுக வேலை வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கும் என்று அதன் சி.இ.ஓ. சுனில் சோப்ரா கூறியுள்ளார். லோகேஷனல் அட் வான்டேஜ், எப்போதும் தமிழ்நாட்டில் மிகப் பெரிய யு.எஸ்.பி. நிறுவனம் ஆகும். அது டயர் தொழிலுக்கு புகழ் பெற்ற நிறுவன மாகும். ஆட்டோ மேட்டிங் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டத்தில் தலைமை இயக்குநர் போத்ராஜா, டயர் உற்பத்தித் துறை பெரிய ஏற்றுமதி துறை என்று கூறியுள்ளார்.

இத்துறை, குளோபல் கேப்பபிலிடி மையங்கள் போன்றவற்றை அமைக் கவும், பணியாற்றி வருகிறது. பி.என்.ஒய். மெல்லான், பார்கிலேஸ், வெல்ஸ் போர்கோ மற்றும் பேபால் ஆகியவையும் இணைந்துள்ளன. உலக வங்கி ஏராளமான மையங்களைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த மாநிலம் கர்நாடகத்துடன் கடும் போட்டியை சந்தித்து வருகிறது. அதனால் தான் அரசு ஜி.சி.சி. கொள்கையை அறிவித்தது. மாநில அரசு மேலும் நிறுவனங்களை செயல்பட வைக்க முடியும் என்று சென்னை சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் தலைவரான “வீல்ஸ் இந்தியா’’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறியுள்ளார். இவ்வாறு “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேடு தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது