கல்வி நிறுவனங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே – குஷ்பூ டுவீட்

0
123

கல்வி நிறுவனங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே – குஷ்பூ டுவீட்

சென்னை, கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவீட்டில்,

“கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே. இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம்.

நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட அப்படி இல்லை. அப்போது யாரும் குறை கூறவும் இல்லை.

உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?” என்று தெரிவித்துள்ளார்.