தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு பெண்கள் 1,77,654 பேர் விண்ணப்பம் : நாடாளுமன்றத்தில் தகவல்
புதுதில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் டாக்டர் அமர் பட்நாயக் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
தேசிய பாதுகாப்பு அகாடமி (II) – 2021 தேர்வுக்கு மொத்தம் 5,75,856 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பெண்களிடமிருந்து 1,77,654 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெண்களின் பயிற்சிக்காக தேவையான கட்டமைப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ தகுதிக்கான விவரங்கள் யுபிஎஸ்சி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன. உடல் தகுதி தேர்வுகள், பயிற்சிக்கு முன்பாக இறுதி செய்யப்படும்.
2020 தேசிய பாதுகாப்பு படை தேர்வுக்கு பெண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
இவ்வாறு மத்திய அமைச்சர் அஜய் பட் தெரிவித்தார்.