சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை

0
125

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை

புதுதில்லிநாடுமுழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த புத்த மதத்தினர், கிறித்தவர், சமணர், முஸ்லீம், பார்சி, சீக்கியர் என அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்வியில் அதிகாரம் அளிக்க மூன்று வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கும் திட்டம் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் அமலாக்கப்படுகின்றன.

மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை  மற்றும் திறன்மிக்க மாணவியருக்கான பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவற்றின் கீழும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

2018-19 முதல்  2020-21 வரை 2,72,84,156 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,96,81,133 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.   விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,547.88 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.