சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளது

0
179
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளது.
விருந்தோம்பல் கல்வியின்  தரத்தை உயர்த்துவற்காக ஒரு முக்கிய நடவடிக்கையாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் பர்மிங்காம் அகாடமி (Birmingham Academy), சிங்கப்பூர், ஒரு புதுமையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முலம் மாணவர்களுக்கு இணையற்ற சர்வதேச கற்றல் அனுபவத்தை வழங்கும்.
இன்று கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்புதல், விருந்தோம்பல் துறை மாணவர்களின் தனித்துவமான கல்விப் பயணத்தின் தொடக்கத்திற்கு வழிவகுக்கிறது .
பயிற்சி முறை:
ஆண்டு 1: விருந்தோம்பல் பயிற்சியில் சிறந்து விளங்கும் சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் பர்மிங்காம் அகாடமியுடன் (Birmingham Academy) செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முலம் முதலாம் ஆண்டு பயிற்சியாக (Diploma in Hospitality Managment)ஐ மாணவர்களுக்கு வழங்கும். இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னை நகரின் மையப்பகுதியான மவுண்ட் ரோட்டில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அடுத்ததாக, 40000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான உட்கட்டமைப்புடன் அற்புதமான லேப் வசதியுடன் உள்ள சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வளாகத்தில் நடத்தப்படும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நட்சத்திர சமையல் கலைஞர்களாலும் தொழில் வல்லுனர்களாலும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு Rs.8000 முதல் Rs.15000  சம்பளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஆண்டு 2: சிங்கப்பூரில் படிப்பு தொடரும், அங்கு மாணவர்கள் மதிப்பிற்குரிய பர்மிங்காம் அகாடமியில் (Birmingham Academy) விருந்தோம்பல் மேலாண்மையில் மேம்பட்ட டிப்ளோமாவில் (Advanced Diploma in Hospitality Managment) சேருவார்கள். இந்த கட்டத்தில் ஆறு மாத கல்விப் படிப்பையும், ஆறு மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சியையும் பெறுவார்கள் மாணவர்கள் அனுபவத்தை பெறுவதோடு மாதம் SGD1,500 (இந்திய மதிப்பில் சுமாராக ரூபாய் ஒரு லட்சம்) சம்பளமாக பெறுவார்கள்.
ஆண்டு 2: மேம்பட்ட டிப்ளமோ முடித்தவுடன், மாணவர்கள் இங்கிலாந்தில் உள்ள டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் (De Montfort University) அல்லது ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் உலகில் இரண்டாவது சிறந்த தரவரிசையில் உள்ள சுவிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூலில்  (The Swiss Hotel Management School,) பட்டப்படிப்பைத் (Degree) தொடர விருப்பம் தெரிவிக்கலாம்.  UKஇல், மாணவர்கள் வாரத்திற்கு 20 மணிநேரம் வரை வேலை செய்யலாம், மாதத்திற்கு £2,000 (இந்திய மதிப்பில் ரூபாய் ரெண்டு லட்சத்திற்கும் மேல்) வரை சம்பாதிக்கலாம்.
“இந்த இறுதிப் படியானது, பட்டதாரிகளை உலக விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கச்செய்து தகுதி வாய்ந்த நிபுணர்களாக மாற்றுகிறது. என்றார் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் தலைவரான திரு.ஆர்.பூமிநாதன். மேலும் அவர் கூறுகையில் “நாங்கள் விருந்தோம்பல் கல்வியில் முன்னோடிகளாக இருக்கிறோம், மேலும் இந்த முயற்சியால் மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தை வழங்குவதில் முன்னோடியாக சென்னைஸ் அமிர்தா திகழும் என்றார்.
சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியின் தலைவரான Dr. Mr.Ng Joon Peng  கூறுகையில் “சென்னைஸ் அமிர்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் திட்டம் மூன்று நாடுகளில் உள்ள பல்வேறு உயர்தர கல்வி அனுபவங்களை வழங்குவதன் மூலம் தொழில்துறை தலைவர்களை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.”
சென்னைஸ் அமிர்தா விருந்தோம்பல் கல்வியில் முன்னணியில் உள்ளது, இக்கல்வி நிறுவனம் செயல் முறை கல்வித் திட்டங்கள் மூலம் திறமையான பட்டதாரிகளை உருவாக்குவதன்றி  தொழில்துறைக்கு தகுதியானவர்களை தயார் செய்கின்றது .
பர்மிங்காம் அகாடமி (Birmingham Academy) சிங்கப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும், இது விருந்தோம்பல் மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி மற்றும் கல்வியை வழங்குகிறது. புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் அடுத்த தலைமுறை விருந்தோம்பல் தலைவர்களை வளர்ப்பதில் இது உறுதிபூண்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு. கலையரசன், நிறுவனர் தர்ஷல் அகாடமி, திரு. ஜெய்நானக் சிங் நிறுவனர் ட்ரைனிங் மைண்ட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் பிரமுகர்கள் திருமதி. கவிதா நந்தகுமார், CEO, திரு. லியோ பிரசாத்,CAD, Dr.T. மில்டன், டீன், மற்றும் பல்கலைக்கழக துறை தலைவர் திருமதி.பானுமதி உடன் இருந்தனர்.
விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 8939200800