சென்னையில் எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனம் தொடங்கும் ‘முழுமையான வீட்டுக்கடன்’ திட்டம்!

0
190
Caption-From left to right - Mr. Sanjay Garyali, Chief Executive - Urban Finance, L&T Finance Ltd. and Ms. Kavita Jagtiani, Chief Marketing Officer, L&T Finance Ltd. at the launch of The Complete Home Loan in Chennai.

சென்னையில் எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனம் தொடங்கும் ‘முழுமையான வீட்டுக்கடன்திட்டம்!

  • டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடன் விண்ணப்ப மற்றும் வழங்கல் செயல்முறை பிரத்யேக நல்லுறவு மேலாளர் மற்றும் வீட்டு உள்ளலங்கார செலவுகளுக்கான நிதியுதவி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த முழுமையான வீட்டுக்கடன் திட்டம் இருக்கிறது.
  • “குறைவாக அல்ல, முழுமையாக” என்ற முத்திரை முழக்கத்துடன் திட்டத்தின் சிறப்பம்சங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் மூன்று தொலைக்காட்சி விளம்பரங்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. 

சென்னை: ரீடெய்ல் / சில்லறைக் கடன் வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான எல் &டி ஃபைனான்ஸ் லிமிடெட் (LTF), சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற கனவைப் பூர்த்தி செய்வதற்கு சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து ஆதரவையும் வழங்குவதற்காக “முழுமையான வீட்டுக்கடன்” (‘The Complete Home Loan’) என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறது.  முழுமையான வீட்டுக்கடன் திட்டமானது, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிதிக்கான விண்ணப்ப மற்றும் வினியோக செயல்முறை வழியாக வழங்கப்படுகிறது.  விண்ணப்பிக்கும் வாடிக்கையாளருக்காக பிரத்யேக நல்லுறவு மேலாளர் ஒருவர் இருப்பதும் மற்றும் வீட்டு உள்அலங்கார செலவுகளுக்கான நிதியுதவியைப் பெறுவதற்கான வசதி இதில் இருப்பதும் இதன் சிறப்பம்சமாகும்.

சௌகரியமான வாழ்விட அமைவிடத்தைப் பெறுவதற்கு தேவைப்படும் அத்தியாவசிய வசதிகள், ஃபர்னிச்சர்கள் மற்றும் அலங்காரங்களை செய்து கொள்வதற்கு வீடுகளை வாங்குபவர்களுக்கு வசதியையும், நெகிழ்வுத்திறனையும் வழங்குவதே ஹோம் டெக்கார் ஃபைனான்ஸ் திட்டத்தின் நோக்கமாகும்.  வீட்டுக்கடன் வாங்கும் பயணத்தை டிஜிட்டல்மயமாக்கப்பட்ட செயல்முறை தொழில்நுட்ப உதவியுடன் மிக எளிதானதாக மாற்றுகிறது.  கடன் செயல்முறை முழுவதிலும் வாடிக்கையாளர் தொடர்புகொள்வதற்கான ஒற்றைமுனையாக ஒரு பிரத்யேக நல்லுறவு மேலாளர் செயல்படுகிறார்.  சிரமமில்லாத, திருப்திகரமான அனுபவம் வீட்டுக்கடன்களைப் பெறுபவர்களுக்கு கிடைப்பதை இது உறுதி செய்கிறது.

தனது சமீபத்திய புதுமையான திட்டத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக தமிழ் மொழியில் மூன்று புதிய தொலைக்காட்சி விளம்பரங்களையும் எல் &டி ஃபைனான்ஸ் தயாரித்து அறிமுகம் செய்திருக்கிறது. “குறைவாக அல்ல, முழுமையாக” (‘Kum Nahi, Complete’) என்ற சிறப்பு முத்திரை முழக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கின்ற இவ்விளம்பரங்கள், நகைச்சுவையையும் மற்றும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய சூழ்நிலைகளையும் விவேகமாக ஒருங்கிணைத்திருக்கிறது.  இதன் முதல் தொலைக்காட்சி விளம்பரம், ‘ஹோம் டெக்கார் ஃபைனான்ஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்கிறது.  இரண்டாவது மற்றும் மூன்றாவது விளம்பரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடன் திட்ட செயல்முறை மற்றும் பிரத்யேக சிறப்பு அம்சங்கள் மற்றும் அதன் பலன்களை முன்னிலைப்படுத்துகின்றன.

எல்&டி ஃபைனான்ஸ் திட்டத்தின் முதன்மை செயலாக்க அதிகாரி திரு. சஞ்சய் கர்யாலி இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “எங்களுக்கு சென்னை மாநகரம் ஒரு மிக முக்கிய சந்தையாகும்; முழுமையான வீட்டுக்கடன் திட்ட அறிமுகத்தின் மூலம் தற்போது கட்டப்பட்டு வருகின்ற மற்றும் குடிபுக தயார்நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு புதிதாக வீட்டுக்கடன்களைப் பெற விரும்புகின்ற புதிய நபர்களை நாங்கள் முதன்மை இலக்குப் பிரிவினராக நாங்கள் கருதுகிறோம்.  நுகர்வோர்களது நடத்தைப் போக்குகளை நன்கு புரிந்து கொண்டிருப்பதன் வழியாக ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான நிதி திட்டத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.  வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்குவதில் இலக்காகக் கொண்டதாக முழுமையான வீட்டுக்கடன் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  மேலே முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்ற அம்சங்களுக்கும் கூடுதலாக, தாள் பயன்பாடு இல்லாத விண்ணப்ப பரிசீலனை சிரமமில்லாத  ஆவணப் பதிவு செயல்பாடு மற்றும் மிகச்சிறந்த சேவை தரநிலைகள் போன்ற முக்கியமான மதிப்புக்கூட்டப்பட்ட அம்சங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.  கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் முக்கியமான மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  வீடு வாங்குவது மட்டுமின்றி, வீட்டு அலங்காரத்திற்கான கூடுதல் தேவைகளுக்கும் சிரமமின்றி நிதியுதவி பெறுவதற்கு நுகர்வோர்களுக்கு எமது பிரத்யேக தீர்வு திட்டங்கள் உதவும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.  எமது இத்திட்டத்தின் வழியாக, சௌகரியமான வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்களுக்கு அவசியமான நெகிழ்வுத்திறனையும், வசதியையும் எமது வாடிக்கையாளர்களுக்கு எங்களால் உறுதியாக வழங்க முடியும்.” என்று கூறினார்.

எல் &டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தையாக்கல் அதிகாரி மிஸ். கவிதா ஜக்தியானி இது தொடர்பாக பேசுகையில், “வீட்டுக்கடன் பெற விரும்புகிறபோது அவர்களது அனைத்து நிதிசார் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற ஒரு ஒற்றை நிறுத்த தீர்வையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.  ஆனால், அநேக நேரங்களில் வேறு வழியின்றி, குறைவான நிதியை அவர்கள் பெறுகின்றனர்.   எல் &டி ஃபைனான்ஸ் வழங்கும் முழுமையான வீட்டுக்கடன் திட்டமானது, அவர்களது தேவைகள் அனைத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  வீட்டு உள்ளலங்கார செயல்பாடுகளுக்கான நிதி மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடன் விண்ணப்ப பரிசீலனை மற்றும் வினியோக செயல்முறை, பிரத்யேகமான நல்லுறவு மேலாளர் போன்ற பல ஆதாயப்பலன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இதை அது முழுமையாகப் பூர்த்தி செய்கிறது.  ஆகவே தான், “குறைவாக அல்ல, முழுமையாக” (‘Kum Nahi, Complete’) என்ற உத்தரவாதத்தை வழங்கும் இத்திட்டத்தை நாங்கள்  தொடங்கியிருக்கிறோம்.  நகைச்சுவை கலந்த அணுகுமுறையை பயன்படுத்துவதன் மூலம் எமது திட்டங்கள் பற்றி மக்களுக்கு தகவலளிக்க தமிழ் மொழியில் எமது தொலைக்காட்சி விளம்பரங்களை சென்னையில் நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம்.  மக்கள் மனதில் இவ்விளம்பரங்கள் மூலம் ஆழமான பிணைப்பை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.  எளிதில் பெறக்கூடிய அணுகுவசதியுள்ள வீட்டுக் கடன்களை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள இவ்விளம்பரங்கள் உதவும் என்று நாங்கள் கருதுகிறோம்.” என்று கூறினார்.

இந்த விளம்பர பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இணைந்து வழங்கும் ஸ்பான்சர்களுள் ஒருவராக இந்நிறுவனம், இருக்கிறது.  ஐபிஎல் போட்டிகளின்போது ஜியோ சினிமா (இணைக்கப்பட்ட தொலைக்காட்சி) மீது இந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவும் மற்றும் வாக்குகள் எண்ணும் நாட்களின்போது முக்கியமான செய்தி சேனல்களிலும் இவ்விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும்.  பல்வேறு சமூக ஊடக சேனல்களிலும் டிஜிட்டல் முறையிலான விளம்பர பரப்புரையையும் இந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

இதற்கும் கூடுதலாக, சென்னையிலும் மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் வெளியரங்க விளம்பர பலகைகளிலும் எல் &டி ஃபைனான்ஸ் பிராண்டின் விளம்பரம் இடம்பெறுகிறது.

இந்த டிவி விளம்பரங்களை காண இங்கு கிளிக் செய்யவும்:

‘முழுமையான வீட்டுக்கடன்’ பெற விண்ணப்பிக்க, +919004555111 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் தரவும் அல்லது +91 9004555111 என்ற எண்ணிற்கு ‘HL’ என்று குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பவும் அல்லது https://www.ltfs.com என்ற எமது வலைதளத்திற்கு வருகை தரவும்.