சென்னையில்  ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த மார்வெலஸ் மார்கழி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது

0
186
சென்னையில்  ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த மார்வெலஸ் மார்கழி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
மீனம்பாக்கம் ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மார்வெலஸ் மார்கழி திருவிழா இசை, நடனம், பாடல் என பல்வேறு துறைகளில் தங்கள் தனித்துவத்தை நிரூபித்த பிரபலங்கள் ராம்ப் வாக் செய்து அசத்தினர்.   சென்னையின் கலாச்சாரத்தை பிதிபலிக்கும் இந்த மார்கழி திருவிழா  ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ராகுல் வெள்ளால், ஸ்டீவன் சாமுவேல் தெவஸ்ஸே  பின்னணி இசையில், பாடகர்கள் அருணா சாய்ராம், ரஞ்சனி காயத்ரி, சுதா ரகுநாதன், பிரியா சகோதரிகள், உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன், சிக்கில் குருசரண், சந்தீப் நாராயண், ராதே ரித்விக் ராஜா ஆகியோர் ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர்.
பத்மா சுப்பிரமணியம், காயத்ரி, மஹதி, ஷோபனா, ஊர்மிளா சத்தியநாராயணன், மீனாக்ஷி சித்தரஞ்சன், உமா முரளி கிருஷ்ணா, பிரியதர்ஷினி கோவிந்த், ஶ்ரீகலா பரத், கோபிகா வர்மா ஆகிய கலைஞர்களின் அசத்தல் நடை அரங்கை அசத்தியது.
மார்வெலஸ் மார்கழி நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பாக, இதுவரை காணக்கிடைக்காத  லால்குடி ஜி ஜே ஆர் கிருஷ்ணன், விஜி வயலின் கணேஷ், குமரேஷ் ஷசங்க், ஶ்ரீஷா ஜெயந்தி குமரேஷ், கண்ணன், மாண்டலின் ராஜேஷ், அணில் சீனிவாசன் ஆனந்தா, சாருமதி விஜி கிருஷ்ணன்  ஆகியோரின் ராம்ப் வாக் அரங்கை அழகூட்டியது.  கலைகளின் கலவையை பிரதிபலித்த இந்த ராம்ப் வாக்கை மிகப்பிரமாண்டமாக வழங்கி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்த மார்வெலஸ் மார்கழி திருவிழாவை இவென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைக்க, பாலம் சில்க்ஸ் ஜெயஸ்ரீ, பிராண்ட் அவதார் ஹேமசந்திரன் சிறப்பாக நிர்வகித்து வழங்கினர்.
ஈவென்ட் ஆர்ட் நிறுவனத்தின் 20வது ஆண்டில் இது போன்ற ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த லட்சுமி மற்றும் சரஸ்வதி சென்னையின் மிக முக்கிய 40 பிரபலங்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்து மார்கழி மாதத்தின் மகத்துவத்தை கொண்டாடியதாக தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த இசையமைப்பாளர் அனிருத் இதுவரை மார்கழி மாதத்தில் பாடல்களை கேட்டிருப்போம் ஆனால் இம்முறை இசை ஜாம்பவான்களை ராம்ப் வாக் செய்ய செய்திருந்த திட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார்.
ஆகப்பெரும் கலைஞர்களை ஒன்றிணைத்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது சிரமமான காரியம் அதை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள் தொடர்ந்து இவர்கள் இதுபோல செய்ய வேண்டும் என இசை கலைஞர் விக்கு விநாயகம் பாராட்டினார்.
நிகழ்ச்சி குறித்து உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னி கிருஷ்ணன் குறிப்பிடும் பொழுது தாங்கள் இதுவரை ஒன்றாக பாடி இருந்தாலும் இதுபோல ஒன்றிணைந்து ராம்ப் வாக்கில் நடந்ததில்லை என்றும் இதுதான் முதன்முறை என்றும் தெரிவித்தனர் மிகவும் மகிழ்ச்சியாக ஒரு புதிய பாடத்தை கற்றுக் கொண்டோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கல்லூரியில் இதுபோன்ற ராம்ப் வாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் இங்கு இரண்டாவது முறையாக ராம் பாக் செய்ததாக குறிப்பிட்ட சுதா ரகுநாதன் கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது மேலும் மகிழ்ச்சியை கூட்டியது என்றார்.
மார்கழி மாதம் என்றாலே கச்சேரி என்ன செய்யலாம் என்று கலைஞர்கள் அனைவரும் பரபரப்பாக இருக்கும் பொழுது வித்தியாசமாக இது போன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைத்தது சிறப்பாக இருந்தது என இசை கலைஞர் ரமேஷ் வைத்யா தெரிவித்தார்.
தங்களுடைய 35 ஆண்டுகால இசை பயணத்தில் இது போன்றதொரு நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை ரொம்ப புதுமையாக இந்த நிகழ்ச்சி இருந்தது என குறிப்பிட்ட பிரியா சகோதரிகள் மார்கழி மாதம் கச்சேரியை தான் பார்த்திருக்கிறோம் இது வித்தியாசமாக சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டனர்,