கலைத்துறையில் சாதனைபடைத்த இசைக்கலைஞர் விக்கு விநாயகம், பரதநாட்டிய கலைஞர் குரு வழுவூர் ராதா மற்றும்  நடிகை வடிவுக்கரசி ஆகியோருக்கு சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன

0
98
கலைத்துறையில் சாதனைபடைத்த இசைக்கலைஞர் விக்கு விநாயகம், பரதநாட்டிய கலைஞர் குரு வழுவூர் ராதா மற்றும்  நடிகை வடிவுக்கரசி ஆகியோருக்கு சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
 
கலைத்துறையில் சாதனைபடைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ப்ரவோக் கலைத்திருவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கலையரங்கத்தில் நடைபெற்றது.
நடிகை அதிதி பாலன் மற்றும் எல்.நரேந்திர குமார் உள்ளிட்டோர் இணைந்து பரதக்கூத்து எனும் தலைப்பில் பரதநாட்டியத்தியத்தோடு தெருக்கூத்து நிகழ்ச்சியையும் கலந்து புதுமையான கலை நிகழ்சியை நடத்தினர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
 அதைத் தொடர்ந்து ரஞ்சனி மற்றும் காயத்ரியின் இசைக்கச்சேரி பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது.
 பின்னர் விக்கு விநாயகம், குரு வழுவூர் ராதா, வடிவுக்கரசி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்  விருதுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திருமதி கிருத்திகா ராதாகிருஷ்ணன், சி எஸ் கே அணியில் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், விவி சுந்தரம், சாம்பால் மற்றும் அஸ்வினி சாம்பால் ஆகியோர் வழங்கினர்.
விருது பெற்ற நடிகை வடிவுக்கரசி உரையாற்றும்போது, விக்கு விநாயகம், குரு வழுவூர் ராதா ஆகிய மாபெரும் கலைஞர்களோடு தனக்கும் ஒரே மேடையில் விருது வழங்கியதை நினைத்தால் நடுக்கமாக இருக்கிறதென தெரிவித்தார். விருது விழா என்று தெரிவித்த நிலையில் இந்த மாமேதைகளுடன் விருது வழங்கியது மாபெரும் பாக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உரையாற்றும்போது, மிகவும் வித்தியாசமாக நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றும் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார். மேலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் கூறப்பட்ட கருத்துகள் மிகவும் ரசிக்கும்படி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் காணொளி காட்சி மூலமாக வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சாம்பால் மற்றும் அஸ்வினிக்கு பாராட்டுகள் தெரிவித்தார். மேலும் 500 டோனி அண்ட் கை கிளைகள் தற்போது இருக்கும் நிலை அது விரையில் 700 ஆக உயர வேண்டும் எனவும் அவர் வாழ்த்தினார்.