இந்தியன் வங்கி – 2023 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள்

0
108

இந்தியன் வங்கி: 2023 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள்

வங்கியின் உலகளாவிய பிசினஸ், முந்தைய ஆண்டைவிட 11% உயர்ந்து ₹11.64 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது

  • நிகர இலாபம், டிசம்பர்’22-ல் பதிவான ₹1396 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் ₹2119 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 52% வளர்ச்சி கண்டிருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம், டிசம்பர்’22-ல் பதிவான ₹1546 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் ₹2747 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 78% உயர்ந்திருக்கிறது
  • செயல்பாட்டு இலாபம், டிசம்பர்’22-ல் பதிவான ₹4061 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் ₹4097 கோடியாக அதிகரித்திருக்கிறது
  • நிகர வட்டி வருவாய், டிசம்பர்’22-ல் பதிவான ₹5499 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் ₹5815 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 6% அதிகரித்திருக்கிறது
  • கட்டணம் சார்ந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 21% வளர்ச்சி கண்டு டிசம்பர்’23-ல் ₹852 கோடியாக உயர்ந்திருக்கிறது
  • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), டிசம்பர்’22-ல் இருந்த 80% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் 31 bps உயர்ந்து 1.11% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
  • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), டிசம்பர்’22-ல் இருந்த 21% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் 471 bps மேம்பட்டு 19.92% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • கடன்கள் மீதான வருவாய் (YoA), டிசம்பர்’22-ல் இருந்த 19% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் 59 bps உயர்ந்து 8.78% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • முதலீடுகள் மீதான வருவாய் (YoI), டிசம்பர்’22-ல் இருந்த 52% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் 28 bps உயர்ந்து 6.80% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • மொத்த கடன்கள், டிசம்பர் ’22-ல் பதிவான ₹451658 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் 13% வளர்ச்சி பெற்று ₹509800 கோடியாக அதிகரித்திருக்கிறது
  • RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் டிசம்பர்’22-ல் இருந்த ₹262811 கோடி என்ற அளவிலிருந்து டிசம்பர்’23-ல் ₹296845 கோடியாக உயர்ந்து 13% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
  • மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 58% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 14%, 16% மற்றும் 7% என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 12%, ஆட்டோமொபைலுக்கான கடன் 46% மற்றும் தனிநபர் கடன் 30% என அதிகரித்திருக்கின்றன
  • முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல் டிசம்பர்’23-ல் ₹171480 கோடி ஆக பதிவாகியிருக்கிறது. ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக ANBC-யின் ஒரு சதவீதமாக முன்னுரிமை துறைக்கான கடன்கள் 71% ஆக பதிவாகியிருக்கிறது
  • மொத்த டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட 10% வளர்ச்சி கண்டு டிசம்பர்’23-ல் ₹654154 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் CASA டெபாசிட் 8%, சேமிப்பு டெபாசிட் 7% மற்றும் நடப்பு டெபாசிட் 12% அதிகரித்திருக்கிறது
  • உள்நாட்டு CASA விகிதம் 14% என பதிவாகியிருக்கிறது
  • GNPA (மொத்த வாராக்கடன்கள்) டிசம்பர்’22-ல் இருந்த 53% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 206 bps குறைந்து 4.47% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) டிசம்பர்’22-ல் இருந்த 1.0% லிருந்து டிசம்பர்’23-ல் 47 bps குறைந்து 0.53% ஆக பதிவாகியிருக்கிறது
  • வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), டிசம்பர்’23-ல் 231 bps அதிகரித்து 90% ஆக பதிவாகியிருக்கிறது
  • மூலதன போதுமான நிலை விகிதம் 15.58% என்பதாகவும் மற்றும் CET-I, முந்தைய ஆண்டைவிட 39 bps உயர்ந்து 36% ஆக பதிவாகியிருக்கிறது மற்றும் அடுக்கு I மூலதனம் 30 bps வளர்ச்சி கண்டு 12.88% என்ற அளவில் இருக்கிறது
  • நிகர இலாபம், செப்டம்பர்’23-ல் பதிவான ₹1988 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் ₹2119 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 7% வளர்ச்சி கண்டிருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம், செப்டம்பர்’23-ல் பதிவான ₹5741 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் ₹5815 கோடியாக உயர்ந்திருக்கிறது
  • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), செப்டம்பர்’23-ல் இருந்த 06% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் உயர்ந்து 1.11% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), செப்டம்பர்’23-ல் இருந்த 90% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் உயர்ந்து 19.92% ஆக உயர்ந்திருக்கிறது
  • கடன்கள் மீதான வருவாய் (YoA), செப்டம்பர்’23-ல் இருந்த 75% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் உயர்ந்து 8.78% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது மற்றும் முதலீடுகள் மீதான வருவாய் (YoI), செப்டம்பர்’23-ல் இருந்த 6.77% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் உயர்ந்து 6.80% ஆக உயர்ந்திருக்கிறது
  • உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), டிசம்பர்’23-ல் 49% ஆக பதிவாகியிருக்கிறது
  • வருவாய்க்கான செலவு விகிதம் டிசம்பர்’23-ல் 90% என பதிவாகியிருக்கிறது
  • நழுவல் விகிதம், டிசம்பர்’23-ல் 28% ஆக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது; செப்டம்பர்’23-ல் அளவான 1.77% என்பதுடன் ஒப்பிடுகையில் இது 49 bps வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது
  • நிகர இலாபம், நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹3834 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் ₹5816 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 52% வளர்ச்சி கண்டிருக்கிறது
  • வரிக்கு முந்தைய இலாபம், நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹4461 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் ₹7894 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 77% உயர்ந்திருக்கிறது
  • செயல்பாட்டு இலாபம், நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹11255 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் ₹12535 கோடியாக 11% அதிகரித்திருக்கிறது
  • நிகர வட்டி வருவாய், நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹14717 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் ₹17258 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 17% அதிகரித்திருக்கிறது
  • சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் இருந்த 75% என்பதிலிருந்து நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் 29 bps உயர்ந்து 1.04% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
  • பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் இருந்த 42% என்பதிலிருந்து நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் 483 bps மேம்பட்டு 19.25% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் இருந்த 35% என்பதிலிருந்து நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் 19 bps அதிகரித்து 3.54% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • கடன்கள் மீதான வருவாய் (YoA), நிதியாண்டு’23-ன் 9 மாத காலஅளவில் இருந்த 60% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் 109 bps உயர்ந்து 8.69% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
  • முதலீடுகள் மீதான வருவாய் (YoI), டிசம்பர்’22-ல் இருந்த 39% என்பதிலிருந்து டிசம்பர்’23-ல் 38 bps உயர்ந்து 6.77% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது

வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:

  • இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5835 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1981 கிராமப்புறங்களிலும், 1527 சிறு நகரங்களிலும், 1173 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1154 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IBU பேங்கிங் யூனிட்டும் இருக்கிறது.
  • இவ்வங்கி, 4899 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 10942 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.

டிஜிட்டல் வங்கிச்சேவை:

  • டிஜிட்டல் சேனல்கள் வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 52,000 கோடியை கடந்திருக்கிறது. இதுவரை 78 டிஜிட்டல் பயணங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இனி வரவிருக்கும் மாதங்களிலும் இன்னும் அதிக பயணங்கள் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன.
  • மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 47% உயர்ந்து 1.59 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
  • UPI பயனாளிகள் மற்றும நெட் பேங்கிங் பயனாளிகள் ஆகிய இரு தரப்பினரும், முந்தைய ஆண்டைவிட (YoY) முறையே ஒவ்வொன்றிலும் 38% அதிகரித்திருக்கிறது; முறையே 1.64 கோடி மற்றும் 1.03 கோடி என்ற அளவை இந்த எண்ணிக்கை எட்டியிருக்கிறது.
  • புதிதாக சேர்ந்துள்ள UPI QR வர்த்தகர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் அளவைவிட 311% பெருவளர்ச்சி பெற்று 36 லட்சம் என்பதை எட்டியிருக்கிறது; PoS-களின் எண்ணிக்கை 47% அதிகரித்து 21725 என்பதாக இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வரி வசூலுக்காக ‘கிராம பஞ்சாயத்துகளுக்காக ஆன்லைன் வரி செலுத்தல் இணையவாசல்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்:

  • BSFI பிரிவில் 2023-24 ஆண்டுக்காக பெரிதும் விரும்பப்படும் பணியிடம் என மார்க்ஸ்மென் டெய்லி-ஆல் இவ்வங்கிக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
  • 2023 பேங்கிங் அவார்டு நிகழ்வில், அதிவேகமாக வளர்ந்துவரும் பொதுத்துறை வங்கி என்ற விருதை தலால் ஸ்ட்ரீட் இன்வெஸ்ட்மென்ட் ஜர்னல் (DSIJ) வழங்கியிருக்கிறது.
  • “பேரடைஸ்” செயல்திட்டத்திற்கு AiX சூழலுக்காக கிளவுட் கம்ப்யூட்டிங்-ஐ செயல்படுத்தியமைக்காக வங்கி தொழில்துறையில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்காக BFSI விருது, கவர்னன்ஸ் நவ் அமைப்பால் இவ்வங்கிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
  • 2023-ம் ஆண்டின் CTO – மிகச்சிறந்த டிஜிட்டல் நிலைமாற்ற தலைவர் என்பதற்காக இவ்வங்கியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) அவர்களுக்கு BFSI விருது தரப்பட்டிருக்கிறது.

எமது கூர்நோக்கம்

பல்வேறு துறைகளையும் பிரிவினரையும் உள்ளடக்கிய வாடிக்கையாளர் அடித்தளத்தின் தனித்துவமான தேவைகளை புரிந்துகொள்வது மீதும் அவற்றை பூர்த்தி செய்வது மீதும் வங்கியின் தளராத கவனமும், அக்கறையும் தொடர்ந்து இருந்து வருகிறது. உயர் நேர்த்திநிலையை எட்டுவது மீதான அர்ப்பணிப்பு உணர்வோடு, நாடெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் பிசினஸ் நிறுவனங்களின் மாற்றம் கண்டுவரும் தேவைப்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு எளிதான நிதிசார் சேவைகளை வழங்க நாங்கள் அயராது பணியாற்றிவருகிறோம்.

CASA (நடப்பு கணக்கு & சேமிப்பு கணக்கு) டெபாசிட்கள் திரட்டலை மேலும் உயர்த்தும் நோக்கத்திற்காக தனது முயற்சிகளை இவ்வங்கி நெறிப்படுத்தி மேற்கொண்டுவருகிறது. எமது மதிப்புமிக்க டெபாசிட்தாரர்களின் மாறுபட்ட தேவைகளை சிறப்பாக பூர்த்திசெய்ய நிகரற்ற வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இந்தியன் வங்கி செயலாற்றுகிறது.