“ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் குடும்பத்தைப் பற்றியது என்பதை நான் இறுதியில் உணர்ந்து கொண்டேன்” – நடிகர் சிமு லியு

0
146

ஷாங்சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் குடும்பத்தைப் பற்றியது என்பதை நான் இறுதியில் உணர்ந்து கொண்டேன்என்று படத்தின் கதையை முதன்முறையாகப் படித்த நடிகர் சிமு லியு கூறினார், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளிவரும் மார்வெல் ஸ்டுடியோஸின் படத்தை கண்டு மகிழுங்கள்

~ஷாங் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் திரைப்படத்தில் அவ்க்வாஃபினா, மெங்கர் ஜங், ஃபாலா சென், ஃப்ளோரியன் முண்டேனு, பெனிடிக்ட் வோங் மற்றும் மைக்கேல் யோஹ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்~

சூப்பர் ஹீரோக்கள் வெல்ல முடியாதவர்களாக இருக்கலாம் ஆனால் ஹீரோக்களாக நடிக்கும் நடிகர்கள் தங்கள் உணர்வுப்பூர்வமான பக்கத்தைக் காட்ட அஞ்ச மாட்டார்கள். ஷாங்சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் நடிகர் சிமு லியு முதல் முறையாக இயக்குனர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டனிடம் படத்தின் கதையைக் கேட்டபோது இதுதான் நடந்தது. குங் ஃபூ மாஸ்டர் ஷாங்-சியின் குடும்பத்துடனான வலுவான பிணைப்பைக் கேட்டு நடிகர் அழுதார். ஆசிய சூப்பர் ஹீரோவை அடிப்படையாகக் கொண்ட மார்வெல் ஸ்டுடியோவின் திரைப்படங்களில் ஒன்றான இப்படத்தில், ஷாங்-சி மர்மமான டென் ரிங்ஸ் அமைப்பின் வலைக்குள் இழுக்கப்படும்போது தனது கடந்த காலத்தில் தீமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. ஷாங்சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

ஷாங்சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸின் கதையைப் படிக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட நடிகர் சிமு லியு பேசுகையில், “கதையை நான் படிக்கும் முன்பும், கடைசியாகப் படிக்கும் போதும் அதை விவரிக்கும் ஒரு அழகான வேலையை டெஸ்டின் செய்தார்.  அப்போது நான் அழுது விட்டேன். ஷாங்-சிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு என்னை அழ வைத்தது. அந்தத் திரைப்படம் குடும்பத்தைப் பற்றியது என்பதை நான் உணர்ந்தேன். ஒரு ஆசிய சூப்பர் ஹீரோ சாகச விஷயங்களைச் செய்து உலகைக் காப்பாற்றுவதைப் பார்த்து நான் அழுதேன். ஒரு ரசிகனாக, ஒரு நடிகனாக, ஒரு ஆசிய மனிதனாக எனக்கு இது மிகவும் ஆழமான தருணமாகும்” எனக் கூறினார்.

~ஷாங்சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ் திரைப்படத்தில் குங் ஃபூ மாஸ்டர் ஷாங்சியின் சாகசங்களை பிரத்தியேகமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டு மகிழுங்கள்~