வாடிக்கையாளர் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம்

0
184

வாடிக்கையாளர் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம்

சென்னை, 22 டிசம்பர், 2021

சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் வரும் 27.12.2021 (திங்கள் கிழமை) காலை 11.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடை பெற உள்ளது.

சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள் / குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை திரு. பி. முருகேசன், முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை 600 001 என்ற முகவரிக்கு 24.12.2021 தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பிவைக்குமாறு சென்னை பொது அஞ்சல் அலுவலகம் முதன்மை அஞ்சல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.