ருபாரு மிஸ்டர் இந்தியாவிற்கான 2022 பட்டத்தை வென்ற சென்னையைச் சேர்ந்த கோகுல் கணேசன், மிஸ்டர் மாடல் சர்வதேசப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாஸா நட்சத்திர விடுதியில் இந்தாண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய ருபாரு மிஸ்டர் இந்தியா 2022 சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோகுல் கணேசன் ரூபாரு மிஸ்டர் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2022 ஆம் ஆண்டின் சிறந்த பேச்சாளர் மற்றும் மிஸ்டர் ஃபோட்டோஜெனிக் விருதுகளையும் அவர் வென்றார். அடுத்து வரும் மாதங்களில் நடைபெற உள்ள மிஸ்டர் மாடல் சர்வதேச போட்டியில் அவர் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்.
மிஸ்டர் மாடல் இன்டர்நேஷனல் என்பது உலகின் மிகப்பெரிய ஆண்களுக்கான மாடலிங் நிகழ்வாகும். இது லத்தீன் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அமெரிக்காவில் ஒரு கிளை அலுவலகத்தையும் கொண்டுள்ளது. போட்டியின் நிறுவனர் மற்றும் தலைவரான திரு. லூயிஸ் ட்ருஜிலோவின் தலைமையில் டிம் மேனேஜ்மென்ட் குழுமம் இந்த நிகழ்வை நடத்துகிறது. நீண்டகால பாரம்பரியத்தின்படி, ருபாரு மிஸ்டர் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர் மிஸ்டர் மாடல் சர்வதேச போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்..