மஹா பெண்களுக்கான சலூன் அழகு நிலையத்தை நடிகரும் பிக்பாஸ் பிரபலம் வருண், மஹா நிறுவனத்தின் நிறுவனர் மகாலட்சுமி கமலக்கண்ணன், கிளையின் உரிமையாளர் மணிமொழி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண்களுக்கான மஹா பெண்கள் சலூன் என்கிற பெண்களுக்கான சலூன் அழகுக்கலை நிலையத்தை நடிகரும் பிக்பாஸ் பிரபலமான வருண் மற்றும் மகா நிறுவனத்தின் நிறுவனர் மகாலட்சுமி கமலக்கண்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேற்கு மாம்பலம் மகா பெண்களுக்கான சலூன் நிலையத்தின் உரிமையாளர் மணிமொழி திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாலட்சுமி கமலக்கண்ணன் தற்போது மேற்கு மாம்பலத்தில் மகா அழகு கலை நிறுவனத்தின் கிளையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு போராட்டங்களுக்கு நடுவில் அழகு கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு மகா அழகு கலை நிறுவனத்தை தொடங்கியதாகவும் தற்போது பல்வேறு இடங்களில் மகா அழகு கலை நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் அனைத்து விதமான அழகு கலை நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர், இதன்மூலம் எனது இலக்கான அடுத்த தலைமுறைக்கு அழகு கலையை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கம் முழுமை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த 33 ஆண்டுகளாக தனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நடிகர் வருண் பேசுகையில் மகா நிறுவனம் தனது அம்மா நான் பிறக்கும்போது தொடங்கினார் தற்பொழுது அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது இதை காணும் போது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தக் கிளையின் உரிமையாளர் மணிமொழி அவர்களை தனது சிறுவயது முதலே தெரியும் அவர் தங்களது அழகுக் கலையின் கிளையை மேற்கு மாம்பலத்தில் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் தான் பங்கு கொள்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்
அழகு நிலையத்தின் உரிமையாளர் மணிமொழி பேட்டி- தான் மகா அழகு கலை குழுமத்தில் தனது அழகு கலை நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்கிற நோக்கம் தற்போது நிறைவேறி இருக்கிறது. நான் கேட்டவுடனேயே தனக்கு இந்த வாய்ப்பை அளித்த மகா நிறுவனத்தின் நிறுவனர் மகாலட்சுமி கமலக்கண்ணன் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
Maha Women’s Salon Located at No.84/48, Navin’s Aishwarya Building, Brindavan Street, West Mambalam, (Near Duraisamy Subway), Chennai – 33