மத்திய தொகுப்புப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாற்றம்

0
95

மத்திய தொகுப்புப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாற்றம்

புதுதில்லிஅக்டோபர் 29, 2021

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாற்றியமைத்து, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுகள் 01.10.2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு மூலம் நாடு முழுவதும் சாலைக் கட்டுமானப் பணி, விமான ஓடுதள கட்டுமானப் பணி மற்றும் கட்டிடப் பணிகள், துப்புரவு பணிகள், சுமை ஏற்றி இறக்குதல், காவலர் போன்ற பணியாற்றும் சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் அனைவரும் முயற்சிப்போம்” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தேச நிர்மாணத்திற்காக பாடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமது தீபாவளி நல்வாழ்த்துகளையும் திரு.பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

Rates of wages for different categories of employees

Schedule employment Category of employees Rate of wages including Variable Dearness Allowance Area wise per day (in Rupees)
A B C
Construction or maintenance of roads or runways or  building operations etc. Unskilled 654 546 437
Semi-Skilled/Unskilled Supervisor 724 617 512
Skilled/Clerical 795 724 617
Highly Skilled 864 795 724
Sweeping and Cleaning  

654 546 437
Loading and Unloading workers  

654 546 437
Watch and Ward Without Arms 795 724 617
With Arms 864 795 724
Agriculture Unskilled 417 380 377
Semi-Skilled/Unskilled Supervisor 455 419 384
Skilled/Clerical 495 455 418
Highly Skilled 547 509 455

For Mines employees

Category Above Ground Below Ground
Unskilled 437 546
Semi-Skilled/Unskilled Supervisor 546 654
Skilled/Clerical 654 762
Highly Skilled 762 851